2015ஆம் ஆண்டு ஜனவரி 08 ம் திகதி ராஜபக்சகளுக்கு எதிரான மக்கள் தீர்ப்பு சவாலுக்கு உட்பட்டுள்ளதால் குழப்ப நிலையை தீர்க்க J.V.P. களம் புகுந்தது..!!

· · 604 Views

உள்ளுராட்சி சபைத் தேர்தல் முடிவுகளுக்கமைய அரசாங்கத்திற்குள் ஏற்பட்டுள்ள நெருக்கடியினால் அரசாங்கத்தை தொடர்ந்து கொண்டுநடத்துவது குறித்து சிக்கல் ஏற்பட்டுள்ளது.

 

 

 

இதனால் அரசாங்கத்தில் விலகி எதிர்க்கட்சி வரிசையில் அமர்வது என அரசாங்கத்திலுள்ள ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் நேற்றிரவு தீர்மானித்துள்ளனர்.

 

 

இந்த நிலையில், பிரதமர் பதவியில் மாற்றம் ஏற்படுத்தப்பட வேண்டும் என்ற கருத்தாக்கம் உருவாக்கியுள்ளது.

 

 

 

இந்த குழப்பங்களுக்கு மத்தியில் 2015ஆம் ஆண்டு ஜனவரி 08ஆம் திகதி ஊழல், மோசடி, ஏகாதிபத்தியத்திற்கு எதிராக மக்கள் வழங்கிய ஆணை சவாலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.

 

 

 

 

மக்கள் வழங்கிய இந்த ஆணையை மைத்திரி – ரணில் தரப்பினர் சரியாக கையாளாததால் மீண்டும் மக்கள் செய்தியொன்றை வழங்கியுள்ளனர்.

 

 

 

 

 

மக்கள் வழங்கிய ஆணையை சரியாக பயன்படுத்தாமையினால் மக்கள் அரசாங்கத்திற்கு எச்சரிக்கை செய்தியொன்றை வழங்கியுள்ளனர்.

 

 

 

 

ராஜபக்ச செயற்பாடுகளுக்கும், இன,மத குரோதம், ஏகாதிபத்தியம் ஆகியவற்றுக்கு எதிராக ஜே.வி.பியுடன் இணைந்து செயல்பட வேண்டும் என அரசாங்கத்திலுள்ள ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் நேற்றிரவு தீர்மானித்துள்ளனர்.

 

 

 

 

இதனால் அநுரகுமார திஸாநாயக்க உள்ளிட்ட ஜே.வி.பியினர் தற்போது தீர்மானிக்கும் சக்தியாக மாறியுள்ளனர்.

 

 

 

 

ஜே.வி.பி.க்கு இதுவொரு வரலாற்று ரீதியான சந்தர்ப்பமாக அமையும் என்று நம்பப்படுகிழறது. இதற்கு தற்போதைய அரசாங்கம் நிபந்தனையின்றி உடன்பட வேண்டும் என்பதே எமது கருத்தாகும்.

 

 

 

 

 

அனைத்து முட்டாள்தனத்திற்கும் தற்போதாவது மைத்திரி – ரணில் தரப்பினர் தீர்வு வழங்க முன்வர வேண்டும். இதனை தனித்தனியாக செய்யாது ராஜபக்சவிற்கு எதிரான சக்தியாக ஒன்றிணைந்து செய்ய வேண்டியிருக்கிறது.

Leave a Reply

Your email address will not be published.