20/= ரூபாய் டிக்கெட் எடுக்காதவர்களே கருப்புத் தரவை தகரங்களை திருடியவர்கள் !! எம்.எஸ்.எம். ரபீக் கண்டனம்

· · 450 Views

எம்.யூ.எம். சனூன்

 

புத்தளம் கால்பந்தாட்ட லீக்கினால், புத்தளம் சாஹிரா தேசிய கல்லூரி மைதானத்தைச் சூழ ஒரு பகுதியை மறைப்பதற்காகப் பயன்படுத்தப்பட்டிருந்த தகரங்களில் சில, இனந்தெரியாத நபர்களால் திருடப்பட்டுள்ளனவென, புத்தளம் கால்பந்தாட்ட லீக்கின் தலைவரும் புத்தளம் நகர சபையின் முன்னாள் உறுப்பினருமான எம்.எஸ்.எம். ரபீக் தெரிவித்தார்.

 

 

புத்தளம் நகர சபையின் விளையாட்டு மைதானம், மாவட்ட விளையாட்டு அரங்காகப் புனரமைக்கப்பட்டு வருகின்ற நிலையில், புத்தளம் கால்பந்தாட்ட லீக்கின் சகல கால்பந்தாட்டப் போட்டிகளும், புத்தளம் சாஹிரா தேசிய கல்லூரி மைதானத்திலேயே நடைபெற்று வருகின்றன.

 

 

 

 

இந்நிலையில், சாஹிரா மைதானத்தைச் சூழ அமைக்கப்பட்டு வரும் சுற்றுமதில் பூர்த்தியாகாத பகுதியில், போட்டிகளைக் கண்டுகளிக்க வருகை தருபவர்கள், நுழைவுச் சீட்டுக்களைப் பெறாமல் வெளியே நின்று போட்டிகளைப் பார்வையிடுவதைத் தடுக்கும் முகமாக, புத்தளம் கால்பந்தாட்ட லீக்கினால் இந்தத் தகரங்கள் அமைக்கப்பட்டிருந்தன.

 

 

 

 

குறித்த தகரங்களே, இனந்தெரியாத நபர்களால் திருடப்பட்டுள்ளன. வெறுமனே 20 ரூபாயைச் செலுத்திப் போட்டிகளைக் கண்டுகளிக்கத் தயாராக இல்லாதவர்களே, இவ்வாறான செயலில் ஈடுபட்டிருக்கலாம் என, எம்.எஸ்.எம். ரபீக், விசனம் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published.