182,250 ரூபா சம்பளத்தில் ஜப்பானில் வேலை வாய்ப்பு !! IM நிறுவனம் வழங்குகிறது !!

· · 819 Views
வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சிற்கும் IM யப்பான் நிறுவனத்திற்கும் இடையில் எட்டப்பட்ட

புரிந்துணர்வு உடன்படிக்கைக்கு அமைவாக யப்பானில் தொழில்வாய்ப்பிற்கான சந்தர்ப்பம் கிடைத்துள்ளது.

இதற்கமைவாக யப்பான் மொழி ஆற்றலில் N4 தரத்துடன் 18 வயதிற்கும் 30 வயதிற்கும் இடைப்பட்ட இளைஞர் யுவதிகள் வேலைவாய்ப்பிற்கு விண்ணப்பிக்கமுடியும்.
பணியாளர் சேவை (Caregiver) தொழிலுக்கு 150 பெண்களுக்கு தொழில்வாய்ப்பிற்கான சந்தர்ப்பம் கிடைத்துள்ளது. அத்தோடு நிர்மாணத்துறையில் 8 இளைஞர்களுக்கு சந்தர்ப்பம் கிடைத்துள்ளது.
இந்த பணியாளர் ஒருவருக்கு மாதாந்த சம்பளமாக யப்பான் நாணயத்தின் 1 இலட்சத்தி 35 ஆயிரம் ஜென்கள் ( 182,250 ரூபா) வழங்கப்படும். நிர்மாணத்துறையில் தொழில்வாய்ப்பு பெறுவோருக்கு யப்பான் மொழியில் உரையாடக்கூடிய ஆற்றல் இருத்தல் வேண்டும்.
இந்த தொழில்வாய்ப்பிற்கு விண்ணப்பிக்க விரும்புவோர் டிசம்பர் மாதம் 21ஆம் திகதிக்கு முன்னர் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் விற்பனை பிரிவிற்கு விண்ணப்பங்களை சமர்ப்பிக்க முடியும்.
இது தொடர்பான மேலதிக விபரங்களை பணியகத்தின் இணையத்தளத்தில பார்வையிடலாம் . பணியகத்தின் தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொண்டு இதற்கான பதிவுகளை மேற்கொள்ளலாம். இந்த வேலைத்திட்டம் தொடர்பில் தெளிவுபடுத்தல் மற்றும் பதிவு செய்தல் தொடர்பான விடயங்கள் டிசம்பர் மாதம் 21 மற்றும் 22 ஆம் திகதிகளில் இடம்பெறவுள்ளது.
காலை 9.00 மணிக்கு இது தொடர்பான நிகழ்ச்சி நிரல் ஆரம்பமாகவுள்ளது. தொழில்வாய்ப்பை எதிர்பார்த்துள்ளோர் ஆள்அடையாளங்களை உறுதிசெய்வதற்கான ஆவணங்களையும் அனுபவங்களை உறுதிசெய்வதற்கான ஆவணங்களையும் கொண்டுவருமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published.