16 கோடிக்கு BENTLEY Mulsanne Hallmark காரை வாங்கி அசத்தினார் கோடீஸ்வரர் தம்மிக்க பெரேரா !!தென்கிழக்கு, மத்திய கிழக்கு ஆசியாவில் இவரிடம் மட்டுமே இந்த கார் உள்ளது – பொட்டிக்கு ஒண்ணு

· · 1389 Views

இலங்கையின் பிரபல கோடீஸ்வர வர்த்தகரான தம்மிக்க பெரேரா என்பவரினால் கொள்வனவு செய்யப்பட்ட அதிக விலையுடனான மோட்டார் வாகனம் தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது.

 

 

அவரால் கொள்வனவு செய்யப்பட்ட Bentley Mulsanne Hallmark என்ற மோட்டார் வாகனம் இதுவரையிலும் இலங்கைக்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன் பெறுமதி இலங்கை ரூபாயில் 160 மில்லியன் எனப்படும் 16 கோடி ரூபாயாகும்.

 

 

Image result for BENTLEY Mulsanne Hallmark in sri lanka

 

தம்மிக்க பெரேராவினால் கொள்வனவு செய்யப்பட்ட Blue மற்றும் Porcelain White நிறத்திலான Bentley Mulsanne Hallmark மோட்டார் வாகனம் விமானம் மூலம் நேற்றைய தினம் இலங்கைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

 

 

Image result for BENTLEY Mulsanne Hallmark in sri lanka

 

 

Bentley Mulsanne Hallmark என்ற வாகனம் உலகில் மொத்தமாக 50 மாத்திரமே தயாரிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய இறுதியாக நிர்மாணிக்கப்பட்ட மோட்டார் வாகனத்தை தம்மிக்க பெரேரா கொள்வனவு செய்துள்ளார்.

 

 

Related image

 

 

அதற்கமைய தெற்காசியா, தென்கிழக்கு ஆசியா மற்றும் மத்திய கிழக்கு எல்லையில் Bentley Mulsanne Hallmark மோட்டார் வாகனத்திற்கு உரிமை கோரும் ஒரே நபராக தம்மிக்க பெரேரா மாறியுள்ளார்.

 

 

Image result for BENTLEY Mulsanne Hallmark in sri lanka

 

 

பிரித்தானியாவில் H. J. Mulliner & Co நிறுவனத்தினால் Bentley Mulsanne Hallmark மோட்டார் வாகனம் தாயரிக்கப்பட்டுள்ளது. அந்த மோட்டார் வாகனம் முழுமையாக மனிதர்களின் கைகளினால் (handcrafted cars) தயாரிக்கப்பட்ட ஒன்றாகும்.

 

Image result for BENTLEY Mulsanne Hallmark in sri lanka

 

 

Mulsanne Hallmark என்ற மோட்டார் வாகனங்களின் தயாரிப்பு 50க்குள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

 

Related image

 

 

Bentley Mulsanne Hallmark மோட்டார் வாகனத்தின் ஆரம்ப விலை 390,000 ஸ்டெர்லிங் பவுண்டாகும். இலங்கை பெறுமதியில் 84 மில்லியன் ரூபாயாகும். அத்துடன் இலங்கை சுங்க பிரிவு தகவல்களுக்கமைய இதற்காக 76 மில்லியன் தீர்வை வரி செலுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Leave a Reply

Your email address will not be published.