133 வருட பாரம்பரியத்தைக் கொண்ட காசீமிய்யாவில் 2% குறைவான புத்தளம் மாணவர்களே கல்வி கற்கிறார்கள்..!! Shocking report

· · 1319 Views

பிள்ளைகள்  பாடசாலை வாழ்க்கையைத் தொடங்குவதற்கு முன்னர்  குர்-ஆனை ஓதத் தொடங்க வேண்டும் என்ற கவைலை  முஸ்லீம் பொற்றோருக்கு  ஆதி காலம் தொட்டே இயல்பாக இருந்து வருகிறது. எனவே குர் ஆன் மத்ரஸாக்களுக்கு சாதாரணமானவர்கள் தங்கள் பிள்ளைகளை அனுப்பும்போது கொஞ்ஞம் வசதி வாய்ப்பு உள்ளவர்கள்  ஆலிம்களை வீடுகளுக்கு வரவழைத்து பிரத்தியேக குர்ஆன் பாடங்களைத் தம் பிள்ளைகளுக்கு நடாத்துகிறார்கள்.

casimiyyah

குர்-ஆன் ஓதுதல் என்பது பெற்றோருக்கு மாத்திரமல்ல சமுகத்திலே செல்வங்கள் அளுளப்பட்டோருக்கும் இயல்பாகவே இருந்து வருகிறது.   அதனால்தான் இந்த நாட்டில் ஜாமியா  நழீமியா கலா பீடம் போன்ற அமைப்புக்களும் சரி, அரபுக் கல்லூரிகள் என அழைக்கப்படும் நிறுவனங்களும் சரி  எங்கெங்கு முஸ்லிம்கள் வாழ்கின்றனரோ அங்கங்கொல்லாம் அமைக்கப்பட்டு, அவற்றிற்கு  உதவி உபகாரங்கள் வழங்கப்பட்டு வெற்றிகரமாக நடாத்தப்பட்டு வருகின்றன.

அப்படி அமைக்கப்பட்ட குர்ஆன்  மத்ரஸாக்களில் புத்தளம் ”மத்ரஸத்துல் காஸிமியா” மிகப் ப‌ழமை வாய்ந்தது.  புத்தளம் நகரின் புகழ் பூத்த தனவந்தரான  “ESM”  தனது  மரண சாதனத்தில் இதற்கான ஏற்பாட்டைச் செய்துள்ளதோடு  வருவாயுள்ள தென்னந் தோட்டங்களைக் கூட அதற்கான எழுது வைத்த கைகரிங்கயங்கள் வரலாற்றுப் பதிவுகளிள் உள்ளன.

”மதர்ஸத்துல் காஸிமியா” வடக்கு, கிழக்கு, மேற்கு, தெற்கொன்று இந்த நாட்டில் பரந்த சன்மார்கக் கல்வி வழங்கி வரும் புகழ் பூத்த மிகப்  பழைய   நிறுவனம்.   இந்த நாட்டிலே உருவான  மூத்த உலமாக்கள் இங்கு  கல்வி கற்றவர்கள்.  1884 ஆம் ஆண்டில் அமைக்கப்பட்ட  மத்ரஸத்துல் காஸிமிய்யா  133 வருடத்தைப் பூர்த்தி செய்து இன்னும் தளர்வில்லாமல் அப்பணியை செய்து வருகிறது.

சங்கைக்குரிய  மஹ்மூத் ஆலிம் அவர்களில் தொடங்கி  அப்துல்லா மஹ்மூத் ஆலிம் வரையில்  அந்தக் குடும்பம் அந்தப் பணிக்காகவே  அர்பணித்து  அந்த கலா பீடத்தை இன்று வழை வழி நடாத்தி வருகிறது. அது வரையறை கடந்த தியாகம்.

இச் சன்மார்க்கக் கலா பீடத்தின்  அதிபர் அப்துல்லா மஹ்மூத் ஆலிம் அவர்கள் தரும் தகவல் எம்மை  வேதனையின் அதள பாதாளத்துக்குக் கொண்டு செல்கிறது.   133 வருட கால சன்மார்க்கக் கல்விப் பணியில் அது உருவாக்கிய புத்தளம் மண்ணின்  உலமாக்கள் 20 ற்கும் குறைவாம்.  இன்று கூட இதுதான் நிலை.   இங்கு கல்வி பயிலும்  180 மாணவர்களின் 2 வீதத்துக்கும் குறைவானோரே  புத்தளம் மண்ணின் மைந்தர்களாக இருக்கிறார்கள்.

வீட்டுக்கு வீடு வைத்தியர்கள், வாசல் படிக்கு வாசல்படி  பொறியிலாளர்கள் என்ற நிலையை உருவாக்கும்  பணியில்   புத்தளம் ஜனாதிபதி விஞ்ஞானக் கல்லூரி  காத்திரமான பங்களிப்புச் செய்து நெடிய  பணயத்தைத் தொடர்கின்ற நிலையில்   சன்மார்க்கக் கல்வியின் நிலை பற்றி கவலை கொண்டு  புத்தளம் மதரஸத்துல் காஸிமியா நிருவாகம் வீட்டுக்கொரு ஆலிம் என்ற திட்டத்தை முன்னெடுத்து வாசற் படிக்கு வாசற்படி  ஊக்குவிப்புப் பிரசுரங்களை  கொண்டு சென்றாலும்  அதற்குக் கிடைத்த பலன் பூச்சியத்தைத் தாண்டவில்லை எனத் தெரிகிறது.

முற்றத்து மல்‌லிகை புத்தளத்தவர் மூக்குகளில் மணக்காவிட்டாலும்  இந்த நாட்டின் நாலா பக்கங்களில் வாழ்வர்களால் அந்த மணத்தை உணர முடிகிறது.  இதனால்தான்  வருடா வருடம் சன்மார்கக் கல்வித் தாகத்தைத் தீர்த்துக் கொள்ள இளைஞர்கள் இங்கு ஓடி வருகிறார்கள்.  இதன் பலன்  நமது  பள்ளிவாசல்கள்  வெளியுர் ஆலிம்களை நம்பி இருக்க வேண்டிய நிலை.

அடிக்கடி நமது பள்ளிவாசல்களில் அதான்  ஒலித்து நீண்ட நேரம் ஆன பின்னரும் கூட  மஃமூன்கள்  யாராவது வந்து தொழுகையை நடாத்த மாட்டார்களா  என எதிர்பார்த்து  திரும்பித் திரும்பிப் பார்தவண்ணம்  பள்ளிவாசல்களின் அமர்நிதருக்க வேண்டிய பரிதாப நிலை ஏற்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published.