13 வயது திருமணத்திற்கு எதிராக குரல் கொடுத்த முஸ்லிம் பெண்மணிகளுக்கு கொலைப் பயமுறுத்தல் !!

· · 910 Views

ஷரியா சட்டத்தை அமுல்படுத்துவதற்கு எதிராக குரல் கொடுத்த வடக்கு மாகாணத்தில் இயங்கும் சில முஸ்லிம் மகளிர் அமைப்புகளின் உறுப்பினர்களுக்கு கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

அவர்கள் இது சம்பந்தமாக சில பொலிஸ் நிலையங்களில் முறைப்பாடு செய்துள்ளனர்.

child_mrr

ஷரியா சட்டத்தின் மூலம் முஸ்லிம்கள் கடும் ஆளுமை ஒன்றை பழக்கமாக கொண்டிருப்பதாக பெயரை வெளியிட விரும்பாத வடக்கில் இயங்கும் மகளிர் சங்கம் ஒன்றின் உறுப்பினர் கூறியுள்ளார்.

இதனை தாம் எதிர்ப்பதால், தமக்கு மரண அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

இலங்கையில் அமுலில் முஸ்லிம் விவாக சட்டத்திற்கு அமைய 13 வயதை பூர்த்தி செய்த முஸ்லிம் சிறுமியை திருமணம் செய்து வைக்க முடியும்.

எனினும் நாட்டில் அமுலில் உள்ள சட்டத்திற்கு அமைய அந்த வயதெல்லையை 16 வயதுக்கு மேல் உயர்த்த வேண்டும்.

இது சம்பந்தமாக விளக்கி அறிக்கை வெளியிட்டதை அடுத்து தமது அமைப்பின் தலைவி உட்பட உறுப்பினர்களுக்கு தொலைபேசி மற்றும் சமூக ஊடகங்கள் வாயிலாக கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டு வருவதாகவும் பெயரை வெளியிட விரும்பாத அந்த உறுப்பினர் மேலும் தெரிவித்துள்ளார்.

One comment

  1. ஒரு பெண் பருவ வயதை எட்டி விட்டாள் .,அவள் திருமணம் முடிக்கலாம்.

Leave a Reply

Your email address will not be published.