1000 C.C.ரக கார்களின் எண்ணிக்கை பெரும் அதிகரிப்பு !! ஒரு ஆட்டோவுக்கு 3 கார்கள் என்ற வீதத்தில் இறக்குமதியாகின்றன !!

· · 596 Views

சிறிய ரக கார்களை இறக்குமதி செய்வதை ஊக்குவிக்கும் வகையில் அவற்றுக்கான வரிச்சலுகையை இந்த ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் நிதி அமைச்சர் மங்கள சமரவீர முன்வைத்திருந்தார்.

 

அதனால் இந்த ஆண்டின் ஆரம்பத்தில் முச்சக்கர வண்டி ஒன்றுக்கு சிறிய ரக கார்களின் இறக்குமதி மூன்று என்ற வகையில் அதிகரித்துள்ளது.

 

 

 

சிறிரக கார்களின் இறக்குமதி அதிகரிப்பு இலங்கையில் இதுவே முதல் தடவையாகும்.

 

நிதி அமைச்சர் மங்கள சமரவீரவின் கன்னி வரவு செலவுத் திட்டத்தில், சிறியரக கார்கள் மற்றும் மின்சார இயங்குநிலை வாகனங்களுக்கு வரிச் சலுகையை வழங்கியிருந்தார்.

 

நிசான் லீப் போன்ற கலப்புமுறை மின்சாரக் கார்களுக்கு (ஹைபிறிட்) ஒரு மில்லியன் ரூபாவிலிருந்து வரிக் குறைப்புச் செய்யப்பட்டது.

 

கடந்த ஜனவரி மாதத்தில் மட்டும் 5 ஆயிரத்து 306 கார்களைப் பதிவு செய்துள்ளதாக ஜேபி செக்கியூரிட்டி நிறுவனம் தெரிவித்துள்ளது.

 

 

இந்தத் தொகை 2017 டிசெம்பருடன் ஒப்பிடும் போது 3 ஆயிரத்து 394 என்ற எண்ணிக்கை அதிகரிப்பாகும். அத்துடன், 2017 ஜனவரியுடன் ஒப்பிடும் போது மூன்றிலொரு பங்கு அதிகரிப்பாகும்.

 

 

ஆயிரம் சிசிக்கு குறைவான இயந்திரக் கொள்ளவுடைய கார்களின் இறக்குமதியே 85 சதவீதமாகும்.கடந்த ஜனவரி மாதத்தில் 4 ஆயிரத்து 510 கார்களும் ஆயிரத்து 543 முச்சக்கர வண்டிகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன.

 

 

ஜனவரி மாதத்தில் ஒவ்வொரு முச்சக்கர வண்டிக்கும் 3 சிறிய ரக கார்கள் இணைந்துள்ளன.

 

 

கடந்த வருடங்களுடன் ஒப்பிடும் போது, இந்த எண்ணிக்கை சற்று அதிகமாகும்.

Leave a Reply

Your email address will not be published.