
100 வயது வயோதிபர்களுக்கு மாதம் 5000/- கொடுப்பனவு -தத்தம் ஊர்களில் யாரும் இருந்தால் தகவல் கொடுங்கள்
· · 258 Views
இலங்கையில் 100 வயதினை கடந்த 250 வயோதிபர்கள் வாழ்வதாக புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. அதனடிப்படையில், அவர்களது வாழ்க்கை பாதுகாப்பு மற்றும் நலன்களை உறுதி செய்யும் நோக்கில், 100 வயதினை கடந்த அனைத்து வயோதிபர்களுக்கும் மாதாந்தம் 5000 ரூபா வீதம் பெற்றுக் கொடுப்பது தொடர்பில் சமூக வலுவூட்டல், நலனோம்புகை மற்றும் மலைநாட்டு உரிமைகள் தொடர்பான அமைச்சர் கௌரவ எஸ்.பி.திசாநாயக்க அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.