0773554441…!! வசீம் தாஜுதீனின் போனுக்கு கடைசியா வந்த மிஸ்ட் கோல் யாருடையது..? தீவிரமாக விசாரிக்குமாறு நீதிமன்றம் உத்தரவு – கொஞ்ச நாளைக்கு இந்தப் படம் ஓடும்

· · 404 Views

படுகொலை செய்யப்பட்ட பிரபல ரக்பி விளையாட்டு வீரர் வசீம் தாஜுதீனுடைய தொலைபேசிக்கு வந்த மிஸ்கோல் அழைப்பு குறித்து விசாரணை தீவிரப்படுத்தப்படுகின்றது.

 

 

 

வசீம் தாஜுதீன் கொலைச் சம்பவம் தொடர்பான வழக்கு, கொழும்பு மேலதிக மாஜிஸ்திரேட் சாந்தனி டயஸ் முன்னிலையில் இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது.

 

 

 

 

இதன்​போது, வசீம் தாஜுதீன் படுகொலை செய்யப்பட்ட 2012ஆம் ஆண்டின் மே மாதம் 17ஆம் திகதி நள்ளிரவு 12.32இற்கு அவரது தொலைபேசிக்கு தவறிய அழைப்பொன்று (மிஸ்கோல்) வந்துள்ளதாக பொலிஸார் நீதிமன்றத்திற்கு அறிக்கை சமர்ப்பித்துள்ளனர்.

 

 

 

 

டயலொக் செல்லிடத் தொலைபேசி இலக்கமான 0773554441 எனும் இலக்கத்திலிருந்து வந்த மிஸ்கோல் அழைப்பு தொடர்பில் முழுமையான விபரங்கள் இதற்கு முன்னர் தொலைபேசி நிறுவனம் வழங்கிய அழைப்பு விபர அறிக்கையில் இல்லை எனவும் குற்றத் தடுப்பு பொலிஸார் சுட்டிக்காட்டியுள்ளனர்.

 

 

 

 

 

எனவே இந்த அழைப்பை மேற்கொண்ட தொலைபேசியின் எமி இலக்கம், ஏனைய தொழில்நுட்ப விபரங்கள் மற்றும் அலைவரிசை பெறப்பட்ட தொலைபேசிக் கோபுரம் ஆகியவற்றின் விபரங்களை பொலிஸாருக்கு வழங்க தொலைபேசி நிறுவனத்திற்கு உத்தரவிடுமாறு குற்றத்தடுப்புப் பிரிவினர் நீதிமன்றத்திடம் வேண்டுகோள் வைத்திருந்தனர்.மேலும், இந்த விபரங்களை வழங்குமாறு நீதிபதி சாந்தனி டயஸ் தொலைபேசி நிறுவனத்திற்கு எழுத்துமூல உத்தரவொன்றைப் பிறப்பித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published.