” ஹெல்மெட் இல்லாததற்காக அபராதம் விதித்த டிராபிக் பொலீசை தாக்கிய அமைச்சர்..!! பொலீஸ் நிலையத்தில் அட்டகாசம்

· · 545 Views

சட்டம், ஒழுங்கு இராஜாங்க அமைச்சர் பியசேன கமகே ஜனவரி முதலாம் திகதி காலி, நாகொட பொலிஸ் நிலையத்தில் தாண்டவம் ஆடியுள்ளார்.

 

 

சட்டம் ஒழுங்கு இராஜாங்க அமைச்சரை கௌரவிக்கும் நிகழ்வொன்று கடந்த முதலாம் திகதி நாகொட பிரதேசத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதற்காக அமைச்சரின் ஆதரவாளர்கள் மோட்டார் சைக்கிள்களில் பேரணியாகச் சென்றுள்ளனர். இவர்கள் தலைக்கவசம் அணியாது பேரணி சென்றதால், போக்குவரத்துப் பொலிசார் அவர்களுக்கு அபராதம் விதித்துள்ளனர்.

 

 

 

குறித்த கூட்டம் நடந்து முடிந்த பின்னர் நாகொட பொலிஸ் நிலையத்திற்குச் சென்ற இராஜாங்க அமைச்சர், குறித்த அபாரதம் விதித்த பொலிஸ் அதிகாரியை தாக்க முற்பட்டுள்ளார். அத்துடன், தகாத வார்த்தைகளைப் பயன்படுத்தி திட்டித் தீர்த்ததுடன், உடனடியாக அபாரதத்தை இரத்துச் செய்யுமாறு அச்சுறுத்தியுள்ளார்.

 

 

 

பியசேன கமகே இராஜாங்க அமைச்சராக பொறுப்பேற்ற பின்னர், அவரது மகனும், மாகாண சபை உறுப்பினருமான ரந்தீம கமகேவிற்கு பொலிஸ் விசேட அதிரப்படையினரால் பாதுகாப்பை வழங்குமாறு கடந்த வெள்ளிக்கிழமை உத்தரவொன்றைப் பிறப்பித்துள்ளார்.

 

 

 

மாகாண சபை உறுப்பினர் ஒருவருக்கு விசேட அதிரடிப்படையினரின் பாதுகாப்பு வழங்குவதா? இல்லையா? என்பதை இரகசிய பொலிஸ் பிரிவினர், பாதுகாப்புப் பிரிவினர் ஆகியோரது அறிக்கைகள் ஆராய்ந்த பின்னரே தீர்மானிக்கப்படுவது வழமையாகும். அவ்வாறு இன்றி தந்தை சட்டம், ஒழுங்கு இராஜாங்க அமைச்சராக பதவி வகிப்பதற்காக இவ்வாறு விசேட பாதுகூப்பிற்காக உத்தரவிட முடியாது என்பதை அனைவரும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

 

 

 

பியசேன கமகே போன்ற தேர்தலில் தோல்வியடைந்த அரசியல்வாதியாவார். கீதா குமாரசிங்கவின் நாடாளுமன்றப் பதவி, நீதிமன்றத் தீர்ப்பிற்கமைய பறிக்கப்பட்டதால் குறித்த வெற்றிடத்திற்கு பியசேன கமகே நியமிக்கப்பட்டார். அத்துடன், அவருக்கு சட்டம், ஒழுங்கு இராஜாங்க அமைச்சுப் பதவியும் வழங்கப்பட்டது. இராஜாங்க அமைச்சுப் பதவி வழங்கப்பட்டதற்கே பியசேன கமகே இவ்வாறு நடந்துகொள்வாராயின், அவருக்கு அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சுப் பதவி வழங்கப்பட்டால் எவ்வாறு நடந்துகொள்வார் என்பதை ஊகிக்க முடிகிறது. பதவி அதிகாரம் கிடைத்தவுடன் இவ்வாறு நடந்துகொள்ளும் அரசியல்வாதிகளை மக்களே புறக்கணிக்க வேண்டும்.

 

 

 

பியசேன கமகே இராஜாங்க அமைச்சராக பதவியேற்ற போது லங்கா நியூஸ் வெப் வாழ்த்து தெரிவித்து செய்தி வெளியிட்டது. அத்துடன் அவர் அதிகார துஸ்பிரயோகத்தில் ஈடுபடுவாராயின் அதனை சுட்டிக்காட்டவும் தயங்கமாட்டோம் எனத் தெரிவித்திருந்தோம்.

 

 

 

இவ்வாறான நிலையில், கடமையைச் செய்த பொலிஸ் அதிகாரியைத் தாக்க முற்பட்டுள்ளதுடன், தனது பாதாள கும்பல் நபர்களுக்கு பொலிஸ் பாதுகாப்பை வழங்கவும் முயற்சித்து வருவதாக எமக்குத் தகவல்கள் கிடைத்துள்ளன.

Leave a Reply

Your email address will not be published.