ஹுலு கங்கையில் மூழ்கிய ஐவரின் உடல்கள் கண்டுபிடிப்பு !! 3 ஆண்கள் 2 பெண்கள்

· · 479 Views

கண்டி – பன்வில பிரதேசத்தில் ஹூலு கங்கையில் நீராடிய போது உயிரிழந்த ஐந்து பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.

 

 

 

மகாவலி கங்கையுடன் இணையக் கூடிய சிறிய கிளையாறான ஹூலு கங்கையில், களு பாலத்திற்கு அருகில் இன்று மாலை நீராடிய ஐந்து பேரும் நீரில் மூழ்கினர்.

 

 

முன்னதாக 4 பேரின் சடலங்கள் மீட்கப்பட்ட நிலையில் ஒரு ஆணின் சடலம் மாத்திரம் கிடைக்கவில்லை.

 

 

இந்தநிலையில் தொடர்ந்தும் மேற்கொள்ளப்பட்ட தேடுதல்களை அடுத்து 5 வது நபரின் சடலமும் இன்றிரவு கிடைக்கப்பெற்றது.

 

 

இதில் மூன்று பெண்களும், இரண்டு ஆண்களும் உள்ளடங்குவதுடன், காணாமல் போயுள்ள நபரின் சடலத்தை தேடும் பணிகள் இடம்பெற்றுக் கொண்டிருப்பதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published.