ஹஜ் கடமைக்காக 10,000 கிலோ மீட்டர் தூரத்திற்கு மோட்டார் சைக்கிளில் செல்ல உள்ள ஊடகவியலாளர் புவி ரஹ்மத்துல்லாஹ் !!

· · 536 Views
(எம்.எஸ்.எம்.நூர்தீன்)  இலங்கையிலிருந்து முதல் தடவையாக புனித ஹஜ் கடமைக்காக மக்காவுக்கு மோட்டார் சைக்கிளில் தரை மார்க் கமாக செல்வதற்காக காத்தான்குடியைச் சேர்ந்த ஊடகவியலாளர் ஒருவர் முஸ்லிம் சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்திடம் அனுமதி கோரியுள்ளார்.
காத்தான்குடியைச் சேர்ந்த சிரேஷ்ட ஊடகவியலாளரான எம்.ஐ.றஹ்மத்துல்லாஹ் (புவி) என்பவரே இதற்கான அனுமதியை கோரி யுள்ளார். இலங்கையிலிருந்து இந் தியாவுக்கு விமானத்தில் சென்று அங்கிருந்து மோட்டார் சைக்களில் புனித ஹஜ் கடமைக் காக மக்காவுக்கு செல் வதற்கான அனுமதியை தருமாறு முஸ்லிம் சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்திடம் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
Image may contain: sky, mountain, outdoor and nature
 
இதற்கான அனுமதி கோரிய கோரிக்கை கடிதத் தினை நேற்று முஸ்லிம் சமய கலாசார அலு வல்கள் திணைக்களத்தின் காத்தான்குடியிலள்ள பிராந்திய அலுவலகத்தில் அதன் அலுவல பொறுப்ப திகாரி அஷ்ஷெய்க் ஏ.எல். ஜூனைட் (நளீமி)யிடம் கையளித்தார்.
 
தான் இலங்கையிலிருந்து மோட்டார் சைக்கிளுடன் இந்தியாவுக்கு விமானத்தில் சென்று இந்தியாவிலிருந்து தரை வழியாக மக்காவுக்கு மோட்டார் சைக்கிளில் செல்வதற்கு எண்ணியுள்ளேன். இதற்காக இலங்கை அரசாங்கம், மற்றும் சவூதி அரேபியா நாட்டு அரசாங்கம் அனு மதியை தரவேண்டும். ஹஜ்ஜுக்கான விண்ணப் பத்தினை கடந்த ஆண்டு ஒப்படைத்தேன்.
 
இதற்கான அனுமதியை முஸ்லிம் சமய கலாசார அலுவல்கள் திணைக்களம் தருவதுடன் ஆதரவினையும் வழங்க வேண்டும். இதற்கான அனுமதிகள் கிடைக்கும் பட்சத்தில் நான் இந்த புனித பயணத்தினை மேற்கொள்வேன். இந்தியாவிலிருந்து தரை வழியாக சுமார் 10000 கிலோ மீற்றர் பயணிக்க வேண்டும் என்றார்.
 
இலங்கையின் வரலாற்றில் முதல் தட வையாக புனித ஹஜ் கடமைக்காக மக்காவுக்கு மோட்டார் சைக்கிளில் தரை வழிமார்க்கமாக செல்வதற்காக ஒருவர் அனுமதி கோரியிருப்பது இதுவே முதல் தடவை என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published.