ஹக்கீம் கடுப்பில் : பொலிஸார் மற்றும் எஸ் டி எப் படையினரே எமது வீடுகளை உடைத்தனர்..!! முஸ்லிம்கள் ஹக்கீமிடம் கதறல் – கிந்தோட்டை பொலீஸ் மா அதிபரின் கட்டுப்பாட்டில்

· · 1589 Views

பொலிஸார் மற்றும் எஸ் டி எப் எங்களது வீடுகளை உடைத்ததாக கிந்தோட்டை பிரதேச மக்கள் அமைச்சர் ஹக்கீமிடம் வாக்குமூலம் அளித்ததை அடுத்து பொலீஸ் மா  அதிபர் பூஜித ஜெயசுந்தர கலவரப்பகுதியை   தனது நேரடி கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வருவதாகவும் அறிவித்துள்ளார்.

 

Image may contain: 8 people, crowd, wedding and outdoor

காலி கிந்தொட்டை பிரதேசத்திற்கு ஶ்ரீ லங்கா முஸ்லீம் காங்கிரஸ் தலைவர் உட்பட பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஐ.மன்சூர் , முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அஸ்லம் ஆகியோர் களத்திற்கு இன்று சென்றுள்ளனர் இதன் போதே சம்பவங்களின் பின்னணிப் பற்றி  அமைச்சருக்கு அறிவிக்கப்பட்டது.
இதன் போது பல்வேறு தரப்பினருடன் பேச்சுவார்த்தைகள் மேற்கொள்ளப்பட்டது.
Image may contain: 12 people
இதன்போது அங்கு கருத்து வெளியிட்ட பிரதேசவாசிகள் பொலிஸ் விஷேட அதிரடிப்படையினர் தங்கள் வீடுகளை தாக்கியதாக குறிப்பிட்டுள்ளனர்.
Image may contain: 1 person, shoes
இதே  வேளை  பாதிக்கப்பட்ட இடங்களை பார்வையிட்ட பொலீஸ் மா அதிபர், அங்குள்ள மக்களின் பாதுகாப்புக்கு உத்தரவாதம் வழங்கியுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
Image may contain: 18 people, crowd

Leave a Reply

Your email address will not be published.