வெட்டாளையின் ராஜா ரிபாய் : அதிகாரங்களுடன் கூடிய உப தலைவராக வருகிறார் !! புத்தளம் பிரதேச சபையில் வென்று சரித்திரம் படைக்கிறார்

· · 1157 Views

M.J.M. ரிபாய்…எப்போதும் துருதுரு வென்று சுறுசுறுப்பாக அரசியல் செய்யும்   ரிபாய் புத்தளம் பிரதேச சபையின் வரலாற்றில்  முதல் தடவையாக வெற்றி பெற்று வெட்டாளை  மக்களின் நாயகனாக மாறி இருக்கிறார்

 

 

 

 

புத்தளம் அசன்குத்தூஸ்  மகா  வித்தியாலயம், புத்தளம் சாஹிராத் தேசியக் கல்லூரி என்பவற்றின் பழைய மாணவரான இந்த தச்சுத் தொழிலாளர், மிகவும் பின் தங்கிய புத்தளத்தின் வடகோடி  மீன் பிடிக்குப்பமான வெட்டாளையின் மக்கள் பிரதிநிதியாகி இருப்பது அனைவரையும் புருவங்களை உயர்த்த வைத்துள்ளது.

 

 

 

 

நடந்து முடிந்த ஒல்லூராட்சி மன்றத் தேர்தலில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்ப்பாக போட்டியிட்ட ஜனாப். ரிபாய் தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட ஐக்கியத் தேசியக் கட்சியின் வேட்பாளரை சுமார் 300 வாக்குகள்  வித்தியாசத்தில்  வெற்றி பெற்றிருக்கின்றார்.இந்தத் தேர்தலில் அவருக்கு 1285  வாக்குகள்  கிடைத்துள்ளன.

 

 

 

 

அவரை சந்திப்பதற்காக  அவரின்  வீட்டுக்குச்  சென்ற  போது  வெற்றியின்  சாயல்களைக்  கூட  காண்பிக்காமல் மிக  அமையாக  நம்மோடு  பேசினார். வார்த்தைக்கு  வார்த்தை K.A.B. யின் பெயரை உச்சரிக்கும் ரிபாயிடம்  இருந்து தலைவர் பாணி  எக்சன்களைக்  காண  முடியவில்லை.

 

 

 

” இந்த வெற்றிக்காக நான் முதல் கண் எல்லாம் வல்ல இறைவனுக்கும் எனது தலைவர் கே.ஏ. பாயிசுக்கும்  எனக்காக எதனையும் எதிர்ப்பாராமால் இரவு பகலாக விழித்திருந்து வேலை செய்த எனது ஆதரவாளர்களுக்கும் தான் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்வதாக அவர் கூறினார்.

 

Image may contain: 2 people, sunglasses and outdoor

 

 

” இப்போது  தான் எனக்கு உண்மையான கடமைகள் இருக்கின்றன. வெட்டாளை, பாச்சான் ஓடை , 20 வீட்டுத் திட்டம்,முல்லிபுரம் மற்றும் மக்கள் புறம்போன்ற எனது ஆளுகைக்கு உற்பட்ட ஏரியாக்கள் நீண்ட நெடுங்காலமாக  அபிவிருத்திகளை  காணாத ஏரியாக்கள் . நான் இனிமேல் இந்த பிரதேசங்களை அபிவிருத்தி  செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். பாதைகள், கரண்ட் என்ற விடயங்களுக்கு அப்பால் இந்த மக்களின் அடிப்படைத் தேவைகளையும் வாழ்வாதரங்களை உயர்த்துவதற்கான முயற்சிகளையும் மேற்கொள்ள உள்ளேன் என்றும் அவர் தெரிவித்தார்.

 

 

 

 

 

தான் இந்தத் தேர்தலில் பணக்காரர்களுடன் மோதியதாகக்கூ றுகிறார். எனக்கு  விழ  வேண்டிய  வாக்குகளில்  சில  பணத்திற்காக விலைப் பொய் விட்டன.  தேர்தலுக்கு முதல்  நாள்  கூட  கார்களில்  வந்தவர்கள்  தமது  பணத்தினால்  வாக்குகளை  வாங்கும்  முயற்சியில்  ஈடுபட்டார்கள். என்றாலும்  கூட  எனது ஆதரவாளர்கள்  அவர்களை  விரட்டியடித்தார்கள்  என்றார்.

 

 

 

 

எப்போதும்  போல  ஒரே  சின்னதிற்குத்  தான்  வாக்களிப்பார்கள்  என்ற விடயம்  இந்தத்  தேர்தலில்  தோற்கடிக்கப்பட்டது  என்றும்  அவர்  கூறினார்.

 

 

 

 

நடைப் பெற்ற புத்தளம்  பிரதேச சபை தேர்தல் முடிவுகளின் பிரகாரம்  முஸ்லிம் காங்கிரசின் 3 உறுப்பினர்களின் ஆதரவு இருந்தால் மட்டுமே  மகிந்த அணியினருக்கோ  அல்லது  ஐக்கியத் தேசியக் கட்சிக்கோ ஆட்சியமைக்க முடியும் . இதனால் முஸ்லிம் காங்கிரஸ் கட்சிக்கு  பேரம் பேசி தமது  அரசியல்  காய்களை நகர்த்துவது  இலகுவானது.

 

 

 

 

இந்த அடிப்படையில் வழக்கமான ரப்பர் ஸ்டாம்ப் உப தலைவர் பதவி  போன்றல்லாமல் அதிகாரங்களுடன்  கூடிய  உப தலைவராக  ஒருவரை நியமிக்க  அக்கட்சியினால் முடியும்.  இந்த  அடிப்படையிலேயே ஜனாப்.M.J.M.  ரிபாய்  சபையின்  உப  தலைவராகக்  கூடிய  அனைத்து  சாத்தியங்களும்  காணப்படுகின்றன.

 

 

 

புத்தளத்தின் கடற்கரை ஏரியாவில்  இருந்து  அரசியலுக்கு  வந்து  நகர  பிதாவாகவும், பாராளுமன்ற உறுப்பினராகவும், அமைச்சராகவும்  சேவை செய்தவர் கே.ஏ. பாயிஸ். அவரின்  அடியொற்றியே  அதே  கடற்கரை  ஏரியாவில்  இருந்து  புத்தளம்  பிரதேச  சபைக்கான  முதலாவது  புத்தளம்  பிரதிநிதியாக , உப  தலைவராக  கடமையாற்ற இருக்கும் ரிபாய்க்கு  வாழ்த்துக்களை தெரிவித்து  விடைப் பெற்றோம்.

 

இபுனு பதூதா.

 

 

 

Leave a Reply

Your email address will not be published.