வீரகுமார திஸாநாயக்கவிற்கு சட்டம், ஒழுங்கு இராஜாங்க அமைச்சுப் பதவி..!!தன்னோடு இணைந்ததற்கு ஜனாதிபதியின் பரிசு

· · 252 Views

விமல் வீரவங்சவின் தேசிய சுதந்திர முன்னணியின் அங்கத்தவரும், ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினருமான வீரகுமார திஸாநாயக்கவிற்கு சட்டம், ஒழுங்கு இராஜாங்க அமைச்சுப் பதவியை வழங்க ஜனாதிபதி தீர்மானித்துள்ளார்.

 

 

ஒருங்கிணைந்த எதிரணியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஏழு உறுப்பினர்கள் அரசாங்கத்தில் இணைந்துகொள்ளவுள்ளதாக லங்கா நியூஸ் வெப் இணைத்தளம் இதற்கு முன்னர் தகவல் வெளியிட்டிருந்தது.

 

 

 

இதற்கமைய வீரகுமார உள்ளிட்ட சிலர் இராஜாங்க, பிரதி அமைச்சுப் பதவிகளைப் பெறவுள்ளனர்.

 

 

 

 

ஜனாதிபதி இதுகுறித்து வீரகுமார திஸாநாயக்கவிற்கு அறிவித்தபோது, சாகல போன்ற நபரொருவருடன் இணக்கமாக பணியாற்ற முடியாது என வீரகுமார திடீரெனத் தெரிவித்துள்ளார்.

 

 

 

 

”சாகல பிரதமரின் அதிகாரங்களை எடுத்துக்கொண்டு வேலை செய்கிறார்” தனக்கு பெயரளவில் அமைச்சர் பதவியொன்று வழங்கப்படுவதால் வேறொரு அமைச்சைப் பெற்றுத்தருமாறு கூறியுள்ளார்.

 

 

 

 

இதற்குப் பதிலளித்த ஜனாதிபதி, ”அதுதான் இந்தப் பதவியை உங்களுக்குத் தருகிறேன்” நீங்கள் என்னுடைய அதிகாரங்களை எடுத்துக் கொண்டு வேலை செய்யுங்கள். அப்போது சரிதானே” என்று ஜனாதிபதி கூறியுள்ளார்.

 

 

 

 

 

வீரகுமார, இதற்கு சம்மதித்துள்ள நிலையில், அவருக்கு விரைவில் சட்டம், ஒழுங்கு இராஜாங்க அமைச்சுப் பதவி வழங்கப்படவுள்ளது.

Leave a Reply

Your email address will not be published.