விஷேட செய்தி : புத்தளம் அருவக்காட்டில் திண்மக் கழிவுகளை கொட்டுவதற்கான மதிப்பீட்டு தொகை 274 மில்லியன் டொலர்களை கடன் பெற்றுக் கொள்ள அமைச்சரவை அங்கீகாரம்

· · 389 Views

2018.02.20 ஆம் திகதி நடைபெற்ற அமைச்சரவை சந்திப்பின் போது எடுக்கப்பட்ட முடிவுகள்

 

20. இலங்கையில் துரித திண்மக் கழிவு முகாமைத்துவ வேலைத்திட்டத்தினை செயற்படுத்துவதற்காக ஆசிய அடிப்படை வசதிகள் முதலீட்டு வங்கியின் மூலம் நிதியினை பெற்றுக் கொள்ளல் (விடய இல. 48)

திண்மக் கழிவு வெளியேற்றுவது தொடர்பான பிரச்சினைகளுக்கு நிலையான தீர்வொன்றை பெற்றுக் கொடுக்கும் நோக்கில் புத்தளம், அருவக்காடு பிரதேசத்தில் திண்மக் கழிவு வெளியேற்றும் சூழல் ஒன்றை ஸ்தாபிப்பது உட்பட தீர்வுகளை செயற்படுத்துவதற்காக இலங்கையில் துரித திண்மக் கழிவு முகாமைத்துவ வேலைத்திட்டத்தினை செயற்படுத்துவதற்காக திட்டமிடப்பட்டுள்ளது.

 

 

 

 

பாரிய நகரம் மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சு மற்றும் மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி மன்றங்கள் அமைச்சு ஆகியவை இணைந்து முன்னெடுக்கப்படவுள்ள இவ்வேலைத்திட்டத்தின் முழு மதிப்பீட்டு தொகை 274 மில்லியன் அமெரிக்க டொலர்களாகும்.

 

 

 

 

இம்மதிப்பீட்டு தொகையில் 115 மில்லியன் அமெரிக்க டொலர்களை உலக வங்கியின் மறுசீரமைப்பு மற்றும் அபிவிருத்திக்கான சர்வதேச வங்கி வழங்குவதற்கும், மேலும் 115 மில்லியன் அமெரிக்க டொலர்களை ஆசிய அடிப்படை வசதிகள் முதலீட்டு வங்கி வழங்குவதற்கும் விருப்பம் தெரிவித்துள்ளன.

 

 

 

 

 

எஞ்சிய 44 மில்லியன் அமெரிக்க டொலர் தொகையினை இலங்கை அரசாங்கம் முதலிட உள்ளது. அதனடிப்படையில் குறித்த தொகையினை பெற்றுக் கொள்வதற்காக வேண்டி ஆசிய அடிப்படை வசதிகள் முதலீட்டு வங்கியுடன் கடன் ஒத்துழைப்பு கலந்துரையாடலில் ஈடுபடுவது தொடர்பில் தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார விவகாரங்கள் அமைச்சர் எனும் ரீதியில் கௌரவ பிரதமர் ரணில் விக்ரமசிங்க அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published.