வில்பத்து விவகாரத்தில் அமைச்சர் றிஷாத் தனியாக போராட்டம்..!! ஹக்கீம், மஸ்தான், ஹுனைஸ் ஆகியோர் கண்டும் காணாமல்

· · 11252 Views
(இப்றாஹிம் மன்சூர்)
இலங்கை முஸ்லிம் மக்களின் தேவைகள் பல தீர்க்கப்படாமல் இழுபட்டுக்கொண்டே செல்கின்றன.அவ்வாறான பிரச்சினைகளில் ஒன்றுதான் வில்பத்து விவகாரமுமாகும். அண்மையில் ஜனாதிபதி மைத்திரி பால சிறி சேனா வில்பத்து வனத்தை விரிவாக்கி வன ஜீவராசிகள் வலயமாக பிரகடனப்படுத்துமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.
 
இச் செய்தி  முஸ்லிம்கள் அதிகம்  வாழும் மன்னார் மாவட்டத்தின் சில கிராமத்து மக்களின் வாழ்வில் இடி விழுந்தாப் போல் ஒரு அச்சுறுத்தலை விடுத்துள்ளது.இதனை அறிந்த நாள் முதல் அமைச்சர் றிஷாத் இதனை தீர்ப்பதற்கு அல்லும் பகலும் பல முயற்சிகளை செய்து வருகின்றார். ஜனாதிபதியை மிகக் கடுமையாக கண்டித்து அறிக்கையும் விட்டுள்ளார்.
risharth-jet
 
நேற்று மாலை ஜனாதிபதியின் குறித்த அறிவிப்பு தொடர்பில் ஆராய்வதற்கு இடம்பெற்ற கூட்டத்தில் அகில இலங்கை ஜம்மியத்துல் உலமாவின் பிரதிநிதிகள்,முஸ்லிம் சிவில் அமைப்பைச் சேர்ந்தவர்கள் உட்பட பல கட்சியினைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்களும் கலந்து கொண்டிருந்தனர்.இருந்தாலும்,இக் கூட்டத்திற்கு மு.காவைச் சேர்ந்த யாருமே வரவில்லை.
 
இக் கூட்டத்தை தான் புறக்கணிக்கின்றார்களா அல்லது குறித்த பிரச்சினையையே தங்களுக்கு சம்பந்தம் அற்றது போன்று நடக்கின்றார்களா என்று பார்த்தால்,இது தொடர்பில் மு.காவைச் சேர்ந்த யாருமே சொல்லி வைத்தாப் போல் ஒரு வார்த்தையும் கூறாமல் இருப்பதானது குறித்த பிரச்சினையையே மு.கா ஒரு பொருட்டாக கணக்கில் கொள்ளவில்லை என்பதையே சுட்டிக்காட்டுகிறது.
அவர்களுக்குள் உள்ள பிரச்சினையை தீர்த்துக் கொள்ளவே அவர்களுக்கு நேரமில்லை என்பது வேறு விடயம்.
 
அமைச்சர் றிஷாத் குறித்த மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் பிரதிநிதி என்ற வகையில் இதில் அதிகம் கவனம் செலுத்த வேண்டிய தேவை உள்ளது.மறைந்த மாமனிதர் மர்ஹூம் அஷ்ரப் மு.காவை இலங்கை முஸ்லிம்களின் பிரச்சனைகளை தீர்த்துக்கொள்ளவே உருவாக்கி இருந்தார்.அந்த கட்சி இன்று மன்னார் மாவட்டத்து மக்களது பிரச்சனைகளை பற்றி கதைக்க தயங்குகிறதென்றால் அது இக் கட்சியை அஷ்ரப் உருவாக்கிய நோக்கை விட்டும் தடம்புரண்டு விட்டது.
 
அமைச்சர் ஹக்கீமை பொறுத்தமட்டில் இனவாதம் எழக் கூடிய எந்த விடயம் பற்றியும் வாய் திறந்து பேச மாட்டார்.அவரது அரசியல் வாழ்வு நீடிக்க வேண்டுமாக இருந்தால் அவர் அவ்வாறு பேசக் கூடாது.அது தான் அவர் தேர்தல் கேட்கும் மாவட்டத்தின் எதார்த்தமான நிலையாகும்.இந் நேரத்தில் மர்ஹூம் அஷ்ரப் இருந்திருந்தால்……?
 
அமைச்சர் ஹக்கீம் தங்களைப் பற்றி சிந்திக்க மாட்டார் என்பது அந்த மக்களுக்கும் தெரியும்.இதனை அறிந்து தான் அந்த மக்கள் கடந்த தேர்தலில் மு.காவை வெட்டுப் புள்ளியை கூட நெருங்க முடியாதளவு தோல்வியடையச் செய்திருந்தனர்.இந் நேரத்தில் இந்த மக்களுக்கு கிடைத்த பொக்கிஷம் தான் அமைச்சர் றிஷாதாகும்.
 
மு.காவுடன் புதிதாக சேர்ந்துள்ள முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹுனைஸ் பாறூக் எங்கே? பாராளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தான் எங்கே? அவர்களது குரல்கள் எங்கே? இது தான் சிலரது உண்மை முகங்களை அறிந்து கொள்ள பொருத்தாமான நேரமாகும். முஸ்லிம்களுக்கு ஒரு பிரச்சினை என்றால் அங்கு அமைச்சர் றிஷாத் தான் எப்போதும் இருப்பார் என்பதை இந்த விடயம் எமக்கு கூறும் செய்தியாகும்.

5 comments

  1. Hello berathar neegal yarandu thariyala sariya bat neegal yaruku atharavumdum thariyala sariya bat iruththalum naan solluran ennandal neegal 1vara mattum oyarththe pesa kudathu sariya ellaththavum yosichchu fbla neegal oru vesayaththa podugal sariya enandal neegal podura oru vesayam ellarum pakkanumdi than podurigal ena so atha neegal naanku arichchu podugal ok bro

  2. விடு கதை: அவனும் செய்ய மாட்டான் அடுத்தவனையும் செய்யவும் விட மாட்டான். அவன் யார்? அவன் தான் (ஹக்கீம் )

Leave a Reply

Your email address will not be published.