விருதோடை இளம் தாய் எரியூட்டப்பட்ட கொலை கேஸ் – சந்தேக நபரின் மறியல் நீடிப்பு

· · 697 Views

புத்தளத்தில் இளம் தாய் ஒருவர் எரியூட்டப்பட்டு கொலை செய்யப்பட்டமை தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேகநபரின் விளக்கமறியல் தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளது.

 

 

சம்பவம் தொடர்பான வழக்கு புத்தளம் நீதவான் நீதிமன்றத்தில் நீதவான் லக்மால் விக்ரமசூரிய முன்னிலையில் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

 

 

 

வழக்கு தொடர்பான ஆவணங்கள் சட்ட மா அதிபர் திணைக்களத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள போதிலும் அது தொடர்பான பரிந்துரைகள் கிடைக்காமையால் சந்தேகநபரின் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.

 

 

அதற்கமைய , சந்தேகநபரை எதிர்வரும் 2 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published.