விடாக்கண்டன் : A.C.M.C. யின் வேட்பு மனுக்களை நிராகரிக்கக் கோரி மீண்டும் கோர்ட் படி ஏறினார் ஹமீத் !!

· · 443 Views

ACMC செயலாளராக உள்ளூராட்சித் தேர்தல் நடவடிக்கைகளுக்காக S.சுபைர்டீன் செயற்பட தேர்தல் ஆணைக்குழு அனுமதி வழங்கியதற்கெதிராக இன்று (20/12/17) வை எல் எஸ் ஹமீட் உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளார்.

 

 

இதில் சுபைர்தீனால் கையொப்பமிடப்பட்டு சமர்ப்பிக்கப்படுகின்ற அ.இ.ம.காங்கிரஸ் சார்பான தேர்தல் நியமனப்பத்திரங்கள் ஏற்றுக்கொள்ளப்படுவதற்கெதிராக அல்லது அவ்வாறு ஏற்றுக் கொள்ளப்பட்டால் அதனை நிரகரிப்பதற்கான இடைக்கால உத்தரவு, மற்றும் தேர்தல் ஆணைக்குழு வின் உத்தரவுக்கெதிராக தற்காலிக தடை உத்தரவு, மற்றும் நிரந்தர உத்தரவு போன்றவை கோரப்பட்டுள்ளன.

 

 

தற்போது நீதிமன்றம் விடுமுறையில் இருப்பதால் சம்மந்தப்பட்ட பிரதிவாதிகளுக்கு வை எல் எஸ் ஹமீட்டின் சட்டத்தரணியினால் அறிவித்தல் ( Notice) அனுப்பப்பட்டுள்ளது.

 

Leave a Reply

Your email address will not be published.