விஞ்ஞானக் கல்லூரி: 07 டாக்டர்கள், 9 இஞ்சினியர்கள்..!! பாயிஸ் கனவு கண்டார் புத்தளம் அனுபவிக்கிறது..!! ஆனாலும் கல்லூரி கோர்ட் படி ஏறப்போகிறது..ஏன்..?

· · 7419 Views

பல வருட காலம் பிள்ளைப் பாக்கியம் இல்லாதிருந்து  மந்திர மாயங்கள் செய்து கருக்கட்டி  தாங்கொண்ணா பிரசவ வேதனையில்  துடித்துத் துடித்து  அறுவைச் சிகிச்சைக்கு ஆளாகப்பட்டு புத்தளம் பெற்றெடுத்த கல்விப் பி‌ள்ளையாகத்தான்   என்னால்  ஜனாதிபதி விஞ்ஞானக் கல்லூரியைக் காண முடிகிறது.  எட்டு ஆண்டுகளுக்கு முன்னர்  மண்ணின் மக்கள் கண்ட  ஒரு அதீத நிகழ்வு அது.  கல்லூரித் தாயின் மடி  தவழந்த மழலைச் செல்வங்களில் 07 பேர் வைத்திய  துறைக்கும்,   09 பேர் பொறியியல் துறைக்கும்  தை பிறந்து ஏழாம் நாளில் தெரிவு செய்யப்படும்   பாக்கியம் பெற்று நிற்கிறார்கள் எனக் கேள்விப்பட்டபோது  ஏதோ  கனவு காண்பது போல ஒரு உணர்வு.

ஜனாதிபதி விஞ்ஞானக் கல்லூரி பற்றிப் பேசப்படும்போதெல்லாம்  அதன் தாபகத் தந்தை  பாயி‌‌ஸைப் பற்றி ஒரு வரிதானும் பேசாவிட்டால்   அது இந்த மண்ணின் செய் நன்றி கொல்லும் பண்பாகத்தான் இருக்க வேண்டும்.  ஜனாதிபதி விஞ்ஞானக் கல்லூரியை உருவாக்கியது ஒன்று, அதற்கு சொந்த நிலத்தை நகரத்தின்  கேந்திர நிலையத்தில் பெற்றுக் கொடுக்க எடுத்த முயற்சி மற்றொன்று..  யார்தான் என்னதான் இந்நாட்களில்   சொன்னாலும், செய்தாலும், செய்யத் துடித்தாலும் அந்த முயற்சிக்கொல்லாம்  அடிப்படை ஒன்று இருக்க வேண்டுமே.   சுவர் ஒன்று இருக்க வேண்டுமே சித்திரம் வரைய.

kab-science

கல்லூரியின் அடைவுகள் பற்றி  வருடா வருடம் பேசுவது நமது வழக்கமாகிப் போய்விட்டது.  ஆனால் இந்த வருடம்,  2016 ஆம் ஆண்டுக்கான  பெறுபேறுகள் வெளியாகியுள்ள தருணத்தில் பேசுவதற்கு எனக்கு வேறு ஒரு முக்கிய விடயம் இருக்கிறது.  அதுதான்  கல்லூரியின்  புதிய இடத்துக்கு ஏற்பட்டுள்ள சவால்

கல்லூரியை அமைத்த முன்னாள் நகர முதல்வர் பாயிஸ்  கேந்திர நிலையமைான  போள்ஸ் வீதியில் அதற்கு ஒரு காணியைப் பெற்றுக் கொடுத்ததும்,  அங்கு  மகிந்தோதைய ஆய்வு கூடத்தை  அமைக்க எடுத்த முயற்சியும் தனித்துவமானது.    அது போல  இப்போது அதற்கு ஏற்பட்டுள்ள இந்த     சவாலும்  வேதனையோடு நோக்கப்பட வேண்டியது..

அந்த சின்னஞ் சிறிய காணிக்குள்  10 பேர்ச்  அளவு கொண்ட ஒரு பகுதி தனக்குச் சொந்தமானது என ஒரு பெண் உரிமை கோருவதுதான் இந்த புதிய தலையிடி.  நேற்று வரையில் எல்லாம்  மிருதுவாகத்தான் நடந்து கொண்டிருந்தது.   பாதியில் கிடந்த கடடிடத்தின் மீதி வேலை தொடங்கப்பட்டு விட்டது, Mercy நிறுவனத்தால் வாக்களிக்கப்பட்ட இரண்டு மாடிக் கட்டிடத்தின்  ஆரம்ப வேலைகள் நடைபெற்றுக் கொண்டிருக்கும் தருணத்தில்தான்  அந்தப் பெண் தன் உரிமைப் போரட்டத்தை  நீதி மன்றம் மூலம் தொடங்கியுள்ளாள்.  இப்போது விவகாரம் தொடர்பான சட்ட மல்யுத்தம் தொடங்கியுள்ளது  நிருமாணப் பணிகளுக்கு இடைக்காலத் தடை உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.

முற் புதரின் மேல் வீசப்பட்ட  பட்டுத் துணியை  மிருதுவாக கழற்றி எடுப்பத போன்ற காரியம்  இது. ஏனெனில் சம்பந்தப்பட்ட பெண்  பிற சமுகத்தைச் சேர்ந்தவர்.   எமது செயற்பாடுகள் மிகக் கனவமாகக் கையாளப்படாது போனால் அது வேதனையான பக்கத்துக்குத் திரும்பக் கூடம்.

.வழக்கு வம்பு என்று போகும்  போது  ஏற்படும் பின் விளைவுள்,   பாடசாலையின் புதிய கட்டிடத்துக்கான இடப்பெயர்வின் தாமதம்  என்பதெல்லாம்  விரும்பத் தகாதவை.  எனவே இவ்விடயத்தில் சமுகத்தின் பங்களிப்பு மிக அவசியம் .

அமைச்சர் ரிசாட் பதுருத்தீன், அவரது கட்சியின் புத்தளம் அமைப்பாளர் அலி சப்ரி போன்றோர்  கல்லூரியின் மீதமுள்ள வேலைகளைச் செய்து முடிக்க வாக்களித்திருந்தது  யாரும் அறிந்த ஒன்றே.   மீதமுள்ள காணியை விலைக்கு வாங்கவதும் அதில் ஒன்று.   இந்த நேரத்தில்தான் இந்த புதிய சட்டப் பிரச்சினை தோன்றியுள்ளது.

பேச்சுவார்தைகள் மூலம் ஒரு இணக்கப்பட்டுக்கு வந்தால்தான் அது ஜனாதிபதி விஞ்ஞானக் கல்லூரிக்கும் நல்லது,  நமது சமுகத்துக்கும் நல்லத , நாட்டின்  சமுக நல்லிணக்கத்துக்கும்  நல்லது.  எனவே இங்கு  முக்கியஸ்தர்கள் இதில் தமது பங்களிப்பைச் செய்ய வேண்டும் என நாமும் எதிர்பார்கிறோம்.

ஐன்ஸ்டீன்

One comment

  1. A promise naming a building in her name, apart from the money she may demand, would encourage her for an amicable settlement. It would also pave a way for communal integration I suppose.

Leave a Reply

Your email address will not be published.