வாகனங்களை நிறுத்துவதில் ட்ராபிக் பொலீசார் அட்டகாசம் !! JVP தலைவர் பாராளுமன்றில் சாட்டை

· · 1100 Views
வாகனங்களை பரிசோதனைக்குட்படுத்தும் காவல் துறையினரின் நடவடிக்கைகளுக்கு புதிய விதி முறை ஒன்றை அறிமுகப்படுத்த வேண்டும் என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.
நாடாளுமன்றில் இன்றைய -24- தினம் உரையாற்றிய போதே அவர் இதனை கேட்டுக்கொண்டுள்ளார்.
வாகனங்களை சோதனைக்குட்படுத்த மற்றும் சாரதி அனுமதி பத்திரங்களை பரிசீலிக்க காவல் துறையினர் மறைந்திருந்து வீதியின் நடுப்பகுதிக்கு ஓடி வருகின்றனர்.
வாகன செலுத்தனர்களின் முகத்திற்கு மின்கல ஒளி சமிக்ஞையை காட்டுதல், நடு வீதிக்கு வருகை தந்து முதலாவது ஒழுங்கையில் செல்லும் வாகனங்களுக்கு கையை காட்டி நிறுத்துதல் இவ்வாறான ஒழுங்கீன நடவடிக்கைகளில் காவல் துறையினர் ஈடுபடுகின்றனர்.
ஆகையினால் வாகனங்களை பரிசீலிக்க முறையான விதிமுறை ஒன்று அவசியம் என அவர் கேட்டுக்கொண்டதோடு, பொது மக்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தும் காவல் துறை உத்தியோகத்தர்களுக்கு கடுமையான சட்ட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published.