வாகனங்களை எவ்வாறு பேணுவது..? ஓட்டுனர்களுக்கு பாடம் நடத்தியது புத்தளம் பொலீஸ் !!

· · 681 Views

( ஏ.என்.எம். முஸ்பிக் )

போக்குவரத்தில் ஈடுபடும் வாகனங்கள் பின்பற்ற வேண்டிய சட்டங்கள் தொடர்பான வேலைத்திட்டமொன்று புத்தளம் நகரில் இடம் பெற்றது.

 

 

சமிக்ஜை விளக்குகள் , டயர், இறக்குமதி செய்யப்படும் வாகனங்களுக்கு மேலதிகமாக ஸ்டிக்கர் ஒட்டுதல் , பூக்களினால் அலங்காரம் செய்தல், பிரயாணிகளை அதிகமாக ஏற்றுதல், பிற மாவட்டத்திலிருந்து வடமேல்  மாகாணத்திற்கு கொண்டு வரப்பட்ட வாகனங்கள் பெயர் மாற்றப்படாமை   உள்ளிட்ட  சட்டங்கள் இந்த வேலைத்திட்டத்தின் போது  தெளிவுபடுத்தப்பட்டன.

 

 

 

மோட்டார் போக்குவரத்து  திணைக்கள  அதிகாரிகள்,  புத்தளம் பொலிஸ் போக்குவரத்து பிரிவு அதிகாரி குமார டி சில்வா ஆகியோரின்  தலைமையில் இடம்பெற்ற  இந்த வேலைத் திட்டத்தில்   புத்தளம் தலைமை பொலிஸ்  நிலைய பொலிஸ்  அதிகாரி .அனுர குனவர்தனவும் கலந்து கொண்டர்.  இதன்  மோட்டார் சைக்கிள், முச்சக்கர வண்டி, பஸ்,டிப்பர், லொரி  உள்ளிட்ட 46  வாகனங்கள் பரிசோதனைக்குட்படுத்தப்பட்டன.

 

 

 

 
 
 
 
 
 
 
 
 
 
By : புத்தெழில் 

Leave a Reply

Your email address will not be published.