வருது வருது, விலகு விலகு … மு.க தனியே வருது.!!!!! வேட்புமனு செய்தது SLMC

· · 411 Views

Rauf Hakeem-SLMCஆப்தீன் யஹியாவும் பல்டி அடித்த நிலையில் யாராவது காசுப்பார்ட்டிகள் அகப்பட மாட்டர்களா என்று கடைசி வரைக்கும் ஆல் தேடிய மு.க. புத்தளம் கிளை (கடந்த நகரசபை தேர்தலில் TS அமீன் அகப்பட்டது போல) ஆசாமிகள்,கடைசியில் சீ சீ  இந்தப்பழம் புளிக்கும் கதையாக A.N.M.ஜவ்பர் மரிக்கார் தலைமையில் வேட்பு மனுவை தாக்கல் செய்துள்ளது. எப்போதும் போலே வாரேன் வாரேன் என்று கூறும் நவவிஉம் அவர்கள் காலை வாரிவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. (அவரை “கை” யே வாரிவிட்டது பாவம் மனிதர் ) இது பற்றி புத்தளம் டுடே பத்திரிகைகு கருத்து கூறிய முகா முக்கியஸ்தர் ஒருவர்,நவவி தன்னைப்போட ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் அனுமதியை பெருமாறு கூறினார்..இது எமது கட்சிக்கு ஏற்றுக்கொள்ள முடியாத கண்டிதியன் என்பதால் நாம் நவவி இல்லாமலேயே லிஸ்ட் போட்டுவிட்டோம் என்றார்.

வடமேல் மாகாண சபைக்காக புத்தளம் மாவட்டத்திற்கான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் வேட்பு மனுவை இன்று காலை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் செயலாளர் பாராளுமன்ற உறுப்பினர், நகைச்சுவை நடிகர் பாணியில் அறிக்கை விடும் ஹக்கீமின் ஒத்து பாடியன   ஹஸன் அலியினால்  தாக்கல் செய்யப்பட்டது.அரசியலுக்கு ப்திதை களமிறங்கி இருக்கும் இல்ஹாம் மரிக்கார் வீட்டில் நேற்று நள்ளிரவில் கூட்டம் ஒன்று நடந்தது. இதில் ஜவ்பர் மரிக்கார் T.S அமீன் போன்ற புள்ளிகள் கலந்து கொண்டனர்.தலைமை நசிர் அஹ்மத்.

ஏ.என்.எம். ஜௌபர் மரைக்கார் தலைமையில் 18 முஸ்லிம் வேட்பாளர்களும் ஒரு தமிழ் வேட்பாளரும் முஸ்லிம் காங்கிரஸ் பட்டியலில் இடம் பெற்றுள்ளனர்.இந்தக் கூட்டதின் வேட்பு மனு எந்த வித பந்தாவுமில்லாமல் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

இன்று நண்பகல் வரை வடமேல் மாகாண சபைக்காக புத்தளம் மாவட்டத்திற்காக இரண்டு கட்சிகளும் ஒரு சுயேட்சை குழுவும் வேட்பு மனுவை தாக்கல் செய்துள்ளன. எட்டு சுயேட்சை குழுக்கள் கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளன.

Leave a Reply

Your email address will not be published.