வடமாகாண சபைத் தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்பு மனுக்களை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தாக்கல் செய்துள்ளது.

· · 403 Views

Election Nominationவடமாகாண சபைத் தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்பு மனுக்களை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வவுனியா, மன்னார், கிளிநொச்சி, முல்லைத்தீவு ஆகிய ஐந்து மாவட்டங்களிலும் தாக்கல் செய்துள்ளது.

முதலமைச்சர் வேட்பாளராகிய ஓய்வுபெற்ற நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன் தலைமையில், நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா, புளொட் அமைப்பின் தலைவர் த.சித்தார்த்தன் ஆகியோர் யாழ்ப்பாணத்திலும், வவுனியா மாவட்டத்தில் தலைமை வேட்பாளர் எம்.தியாகராஜா தலைமையில் நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், முன்னாள் நகரசபைத் தலைவர் ஜி.ரீ.லிங்கநாதன் ஆகியோரும் வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்தனர்.

முல்லைத்தீவு மாவட்டத்தில் தலைமை வேட்பளார் அன்ரனி ஜெனநாதன் தலைமையில் நாடாளுன்ற உறுப்பினர் வினோ நோகராதலிங்கம், டாக்டர் சிவமோகன் ஆகியோரும் மன்னார் மாவட்டத்தில் தலைமை வேட்பாளர் டாக்டர் குணசீலன் தலமையில் சிவகரன், ஜுட் ஆகியோரும், கிளிநொச்சி மாவட்டத்தில் தலைமை வேட்பாளரான தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வி.ஆனந்த சங்கரி தலைமையில் முன்னாள் கல்விப் பணிப்பாளர்களான குருகுலராஜா, அரியரத்தினம் ஆகியோரும் வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனர்.
யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களில் மூன்று பெண்களும் இந்தத் தேர்தலில் போட்டியிடவுள்ளார்கள். யாழ் மாவட்டத்தில் முன்னாள் விடுதலைப்புலிகளின் திருகோணமலை மாவட்ட அரசியல்துறை பொறுப்பாளர் எழிழனின் மனைவி சசிகரன் அனந்தி போட்டியிடுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published.