வடக்கா – கிழக்கா..? : முஸ்லிம் அரசியலின் தேசியத் தலைவர் ஒருவர் மகிந்தவை சந்தித்தார்..!! What next..?

· · 686 Views

முஸ்லிம் அரசியல் கட்சியொன்றின் தலைவர் ஒருவருக்கும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கும் இடையில் முக்கிய சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

கொழும்பு விஜயராமையில் அமைந்துள்ள முன்னாள் ஜனாதிபதியின் இல்லத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளதாக அறிவிக்கப் பட்டுள்ளது.

எதிர்காலத்தில் அரசியல் நடவடிக்கைகளை எவ்வாறு கையாள்வது என்பது தொடர்பாக இதன்போது பேச்சுவார்த்தை இடம்பெற்றுள்ளது.

16298761_10154017041226467_6827110953408084152_n

குறித்த அரசியல் தலைவர் மஹிந்த அணியுடன் இணைய தயாரான நிலையில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது. எனினும் சரியான தருணம் வரும் வரை பொறுமையாக காத்திருக்குமாறு மஹிந்த ராஜபக்ஷ இவரை கேட்டுக்கொண்டுள்ளார்.

கடந்த பாராளுமன்ற தேர்தலின் பின்னர் நல்லாட்சி மேடையில் தோன்றியிருந்த இந்த அரசியல்வாதி மீண்டும் மஹிந்த ராஜபக்ஷவுடன் பேச்சுவார்த்தை நடாத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published.