“வசீம் தாஜூதீனைக் கொன்றவர்கள் யார் என்பது முழு நாட்டுக்கும் தெரியும் !! அமைச்சர் சம்பிக்க யாரைச் சொல்லுகிறார்..?

· · 1059 Views

றக்பி வீரர் மொஹமட் வசீம் தாஜூடீனை கொலை செய்தது யார் என்பது மக்களுக்கு நன்றாகவே தெரியும் என அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

 

 

கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து வெளியிடும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார். தொடர்ந்தும் அவர் அங்கு கருத்து தெரிவிக்கையில்,

 

 

 

கடந்த அரசாங்க காலத்தில் இடம் பெற்ற வசீம் தாஜூடீனின் கொலையுடன் தொடர்பு பட்டவர்கள் யார் என்ற விபரம் முழு நாட்டு மக்களுக்கும் நன்றாகவே தெரியும். அதற்காக கடந்த தேர்தலில் அவர்கள் தண்டனையும் கொடுத்து விட்டார்கள்.

 

 

இந்த அரசாங்கம் எமக்கானது அல்ல அப்படி இருந்தால் வசீம் தாஜூடீனை கொன்றவர்களை நாளையே சட்டத்தின் முன்னால் நிறுத்துவோம் என்பதை உறுதியாக கூறுகின்றோம். வரும்காலத்தில் இந்த கொலையுடன் தொடர்புபட்டவர்களை வெளிப்படுத்தும் முயற்சியை நாம் முன்னெடுப்போம்.

 

 

இதன் பின்னணியில் பலர் உள்ளனர் அவர்கள் தொடர்ந்தும் காப்பாற்றப்பட்டு வருவதாலேயே இந்த கொலை வழக்கு தொடர்ந்தும் இழுபறியாகியுள்ளது.

 

 

வடக்கில் கொலை செய்யப்பட்ட வித்தியாவின் வழக்கில் குற்றவாளிகள் தண்டிக்கப்பட்டது நீதிக்கான நல்லதோர் எடுத்துக்காட்டாகும் அதுபோல நாட்டில் கிடப்பில் உள்ள அனைத்து வழக்குகளும் முறையாக விசாரிக்கப்பட்டு குற்றவாளிகள் கைது செய்யப்பட வேண்டியதும் முக்கியமாகும் எனவும் சம்பிக்க மேலும் தெரிவித்துள்ளார்.

One comment

Leave a Reply

Your email address will not be published.