வசீம் தாஜூடீன் தாக்குதல் சம்பவத்தின்று நள்ளிரவில் ஷிரந்தி தூங்காமல் இருந்தார்..? C.I.D.யினர் சந்தேகம்

· · 2449 Views

தாக்குதலுக்குள்ளான ரக்பி வீரர் வசீம் தாஜூடீன் தாக்குதல் சம்பவத் தினத்தன்று நள்ளிரவில் முன்னாள் ஜனாதிபதியின் பாரியார் ஷிரந்தி ராஜபக்ஷவின் நடவடிக்கை, தற்பொழுது தாக்குதல் தொடர்பில் விசாரனை நடாத்தும் இரகசிய பொலிஸார் குழுவினருக்கு சந்தேகம் எழுந்துள்ளதாக தகவல்கள் குறிப்பிடுகின்றன.

இவ் விசாரனை குழுவினர் அலரிமாளிகையின் தொலைபேசி பிரிவின் தகவல்களை பல மாதங்களாக விசாரனைக்காக கோரியிருந்தும் முன்னாள் ஜனாதிபதியும் தற்போதைய ஜனாதிபதியினது பாதுகாப்பிற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் விக்கிரமசிங்கவின் தலையீட்டினால் அத்தகவல்களை வழங்குவதை அப்பிரிவின் தாமதித்துள்ளனர்.

பிரதி பொலிஸ் மா அதிபர் விக்கிரமசிங்க அந்த தடை தொடர்பில் இரகசிய பொலிஸார் நீதிமன்றத்திற்கு அறிவித்ததன் நிமித்தம் அதன் தகவல்களை உடனடியாக வழங்குமாறு நீதவான் ஜனாதிபதி செயலகத்தின் பிரதானிக்கு உத்தரவிட்டுள்ளது.

16d983dc229d1c86ae548cba58f45a7e_XL

அந்த தகவல்கள் கிடைத்ததினால் தொலைபேசி இலக்கங்களை விசாரனை செய்து பாரக்கும் பொழுது சம்பவம் இடம்பெற்ற தினத்தன்று நள்ளிரவில் ஒரே இலக்கத்திலிருந்து 41 அழைப்புகள் எடுக்கப்பட்டுள்ளதாக விசாரனை குழுவினருக்கு தெரியவந்துள்ளது. குறிப்பிட்ட தொலைபேசி இலக்கம் முன்னாள் ஜனாதிபதியின் பாரியர் ஷிரந்தி ராஜபக்ஷவின் தனிப்பட்ட தொலைபேசி என மேலும் விசாரனையில் தெரியவந்தள்ளது.

இந்த தொலைபேசியினூடாக அதிகளவில் நாராஹேன்பிட்டிய முன்னாள் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியின் கையடக்கத் தொலைபேசிக்கும் கல்கிஸ்ஸ தலைமையகத்தின் பொலிஸ் பரிசோதகரின் கையடக்கத் தொலைபேசிக்கும் நள்ளிரவில் தொடர்பு கொண்டுள்ளமை இரகசிய பொலிஸ் குழுவினர் விசேட கவனத்திற்கு கொண்டுள்ளனர்.

இது தொடர்பில் தெளிவுபடுத்துவது தொடர்பில் வெகு விரைவில் முன்னாள் ஜனாதிபதியின் பாரியார் இரகசிய பொலிஸாரினால் விசாரனைக்காக அழைப்பு விடுவதற்கு தீர்மார்மானித்துள்ளனர்.

.net/news/2015-08-30-15-44-34/item/3078-2017-01-26-09-57-28

Leave a Reply

Your email address will not be published.