வசீம் தாஜுதீன் விவகாரம் : “மிக பிரபல்ய குற்றவாளிகளை நெருங்கும் C.I.D…!! மகிந்தவின் இரு P.S.D. அதிகாரிகளிடம் மிக நுணக்கமான விசாரணை

· · 965 Views

பிர­பல றக்பி வீரர் வஸீம் தாஜு­தீனின் படு கொலை தொடர்பில் குற்றப் புல­னாய்வுப் பிரிவின் தனிப்­பட்ட ஒற்றர் ஒருவர் ஊடாக விஷேட தக­வல்கள் சில கிடைக்கப் பெற்­றுள்­ள­தா­கவும் அந்த தக­வல்­களின் ஊடாக மிக முக்­கி­ய­மான விசா­ரணை ஒன்று இரக­சி­ய­மாக முன்­னெ­டுக்­கப்பட்டு வரு­வ­தாக சட்ட மா அதிபர் திணைக்­களம் நேற்று கொழும்பு மேல­திக நீதிவான் ஜெயராம் டொஸ்­கி­யிடம் அறி­வித்­தது.

வஸீம் தாஜுதீன் படு­கொலை விவ­காரம் தொடர்­பி­லான விசா­ர­ணைகள் நேற்று கொழும்பு மேல­திக நீதிவான்  ஜெயராம் டொஸ்கி முன்­னி­லையில் விசா­ர­ணைக்கு வந்தபோதே இதனை சட்ட மா அதிபர் திணைக்­க­ளத்தின் மேல­திக சொலி­சிற்றர் ஜெனரல் டிலான் ரத்­னா­யக்க நீதி­வா­னுக்கு தெரி­வித்தார்.

mahinda_rajapaksa_anuradhapura

நேற்­றைய விசா­ர­ணைகள் ஆரம்­ப­மான போது, வஸீம் படு­கொலை தொடர்­பி­லான சாட்­சி­களை அழித்­தமை தொடர்பில் கைதாகி விளக்­க­ம­றி­யலில் வைக்­கப்பட்­டுள்ள மேல் மாகா­ணத்­துக்கு பொறுப்­பான முன்னாள் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதி­ப­ராக இருந்த அனுர சேன­நா­யக்­கவை சிறைச்­சாலை அதி­கா­ரிகள் மன்றில் ஆஜர் செய்­தனர்.

இதன்போது நீதி­மன்றில் குற்றப் புலனாய்வுப் பிரிவின் மனிதப் படு­கொ­லைகள் தொடர்­பி­லான விசா­ரணைப் பிரி­வினர் மேல­திக அறிக்கை ஒன்­றினை சமர்­ப்பித்­தனர்.

குறித்த அறிக்­கையில், வஸீம் தாஜு­தீனின் படு­கொலை இடம்­பெற்ற தினம் மற்றும் அதனை தொடர்ந்த தினம் ஆகி­ய­வற்­றுக்­கு­ரிய, ஜனா­தி­பதி செய­ல­கத்தின் வாகன உள், வெளி செல்லும்போது பதிவு செய்­யப்­படும் வாகன பதிவுப் புத்­த­கத்தின் பக்­கங்கள் கிழிக்­கப்பட்­டுள்­ளமை தொடர்பில் தீவிர விசா­ரணை இடம்­பெற்று வரு­வ­தாக அறி­வித்­தனர்.

இது தொடர்பில் முன்னாள் ஜனா­தி­பதி பாது­க­ாப்புப் பிரிவின் இரு­வரை விசா­ர­ணைக்கு உட்­ப­டுத்­தி­யுள்­ள­தாக அவர்கள் அறி­வித்­தனர்.

இந் நிலையில் நீதி­வா­னிடம் விசா­ரணை தொடர்பில் தெளிவுபடுத்­திய சட்ட மா அதிபர் திணைக்­க­ளத்தின் மேல­திக சொலி­சிற்றர் ஜெனரல் டிலான் ரத்­நா­யக்க, ‘ வஸீம் தாஜுதீன் படு­கொலை தொடர்பில் தனிப்­பட்ட ஒற்றர் ஒருவர் ஊடாக எமக்கு சில முக்­கி­ய­மான தக­வல்கள் கிடைத்­துள்­ளன.

அது தொடர்பில் புல­னாய்வுப் பிரி­வினர் மிக சூட்­சு­ம­மாக விசா­ரணை செய்­கி­றார்கள். அத்­துடன் படு­கொலை செய்­யப்பட்ட வஸீம் தாஜு­தீ­னுக்கு சொந்­த­மான கட­னட்­டையை அவ­ரது கொலைக்கு பின்னர் யாரேனும் பயன்­ப­டுத்­தி­னரா என்ற கோணத்­திலும் விசா­ரணை நடத்­தப்­ப­டு­கி­றது.

இதனைவிட வஸீம் தாஜு­தீனின் மரணம் தொடர்பில் ஆரம்­பத்தில் பிரேத பரி­சோ­த­னை­களை முன்­னெ­டுத்­தி­ருந்த கொழும்பு முன்னாள் சட்ட வைத்­திய அதி­காரி ஆனத்த சம­ர­சே­க­ர­வுக்கு எதி­ராக இலங்கை மருத்­துவ சபை முன்­னெ­டுத்­துள்ள விசா­ரணை எதிர்­வரும் 21 ஆம் திகதியாகும்போது நிறைவு செய்­வ­தாக எனக்கு அறி­வித்­துள்­ளனர்’ என அறி­வித்தார்.

இதனையடுத்து விடயங்களை ஆராய்ந்த நீதிவான் ஜெயராம் டொஸ்கி வழக்கை எதிர்வரும் 27 ஆம் திகதிக்கு ஒத்தி வைத்ததுடன் அதுவரை முன்னாள் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் அனுர சேனநாயக்கவை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.

Leave a Reply

Your email address will not be published.