லெஸ்வெகாஸ் என்கிற Port city : போர்ட் சிட்டியில் ஒரு பேர்ச் காணி விலை 2 கோடி ரூபாய் !! அரசாங்கம் விற்பனை

· · 591 Views
கொழும்பு துறைமுக நகரத்தின் (போர்ட் சிட்டி) ஒரு பேச்சர்ஸ் நிலப்பரப்பை 200 இலட்சம் ரூபாவுக்கு விற்பனை செய்ய முடியும் என அமைச்சர் சம்பிக்க ரணவக்க நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
இதன் ஒரு பேச்சர்ஸ் நில பரப்பை உருவாக்குவதற்கு 285,000 ரூபா செலவாகுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
துறைமுக நகரின் கண்காணிப்பு பணியில் நேற்று ஈடுபட்டிருந்தபோது ஊடகமொன்றிடம் இந்தக் கருத்தை வெளியிட்டுள்ளார். 2019ஆம் ஆண்டில் நிலப்பரப்பை உருவாக்கும் பணிகள் முடிவுக்கு வந்துவிடும்.
அவை முடிவுக்கு வந்ததன் பின்னர், இந்த துறைமுக நகரம் இலங்கையின் நிலப்பரப்பாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் அறிவிக்கப்படும் என அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published.