ரிஷாத் at N.R.H. : டாக்டர் இல்யாசுக்கு டோஸ்…நிஸ்தார் செல்லப்பா, முர்சிதுக்கு வாழ்த்து

· · 1304 Views

” நீங்கள்  மூத்த  அரசியல்வாதிவாதி  மட்டுமல்ல  ஒரு  பெரியவர், ஒரு  முன்னாள்  எம்.பி. எல்லாவற்றையும்  விட  மேலாக ஒரு  டாக்டர். எனவே  இவைகளை  கருத்திற் கொண்டு  உங்கள்  பிரச்சாரங்களில்  எவரையும்  தூற்ற  வேண்டாம்  என அகில  இலங்கை  மக்கள்  காங்கிரஸ்  தலைவரும்  அமைச்சருமான  ரிஷாத்  பதியுதீன், மூத்த  அரசியல்வாதியான  டாக்டர். இல்யாசுக்கு  அறிவுரை  வழங்கினார்.

 

 

 

முன்னாள் எம்.பி. யான  டாக்டர்  இல்யாஸ்  முஸ்லிம்  காங்கிரஸின் ஒரு  பிரபல  வேட்பாளரை  அளவுக்கு  அதிகமாக  தூற்றுவதாக  புத்தளம்  டுடேயின்  செய்தியாளர்  ஒருவர்  அமைச்சர்  ரிஷாதிடம்  சுட்டிக்  காட்டிய   போதே  இந்த  அறிவுரையை அமைச்சர் கூறினார்.

 

 

” நாம்  யாரையும்  தாக்கி  அவர்களை  பெரியவர்களாக்கத்  தேவையில்லை. அண்மையில்  புத்தளம்  வந்த  முஸ்லிம்  காங்கிரஸ்  தலைவர்  நடனமாடியவாறே  என்னைத்  தாக்கிப்  பேசியதாக  கேள்விப்பட்டேன். ஆனால்  நான்  அவரை  எங்கும்  தூசிப்  பேசவில்லை. அடுத்தவர்களின்  பத்வாவை  நாம்  பெற  முயலக்கூடாது  என்றும்  அவர்  கூறினார்.

 

 

 

 

 

இதே  மீண்டும்  அரசியல்  பிரவேசம்  செய்திருக்கும்  வை. எம். நிஸ்தாத் மற்றும்  முர்சித்  ஆகிய  வேட்பாளர்களையும்  நவவி  எம்.பி. அமைச்சருக்கு  அறிமுகம்  செய்து  வைத்தார்.

 

 

அவர்களிடம்  பேசிய ரிஷாத், இருவரும்  கட்சியின்  வெற்றிக்காக  பாடுபட  வேண்டும் எனக்  கூறி  இருவருக்கும்  வாழ்த்துத்  தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published.