ரஷ்ய தூதுவரை சுட்ட பொலீஸ் காரரும் மரணம்..!! அவரின் குடும்பமும் கைது – சிரிய முஸ்லிம்களுக்காக ஒரு தியாகம்

· · 1300 Views

துருக்கியில் ரஷ்ய தூதரை சுட்டுக்கொலை செய்த  கொலையாளியின் பெற்றோர் உள்ளிட்ட 6 பேரை காவல்துறையினர் கைது விசாரணை நடத்தி வருகின்றனர்.

butin

துருக்கியின் தலைநகர் அங்காராவில் நேற்று நபர் ஒருவர் நடத்திய துப்பாக்கி சூட்டில் அந்நாட்டிற்கான ரஷ்ய தூதர் அண்ட்ரிவ் கொலோவ் கொல்லப்பட்டதனையடுத்து காவல்துறையினர்  நடத்திய பதில் தாக்குதலில் அந்த நபரும் சுட்டுக்கொல்லப்பட்டார். கொலையாளி துருக்கி காவல்துறையினரான  ஆல்டின்டாஸ் என்பது விசாரணையில் தெரியவந்தது.

இந்நிலையில்  கொலையாளி அல்டின்டாசின் தாய், தந்தை, சகோதரி, உள்ளிட்ட 6 பேரை  காவல்துறையினர் கைது செய்து  தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆட்சியை கவிழ்க்க முயன்றதாக குற்றம்சாட்டப்பட்டுள்ள பெதுல்லா குலெனின் குழுவினருக்கும் இந்த தாக்குதல் நடத்திய நபருக்கும் தொடர்பு இருக்கலாம் என அங்காரா நகர மேயர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published.