ரவுடித்தனம் : மத மாற்ற முயற்சியில் ஈடுபட்டவர்களை தாக்கும் பிக்கு !! வீடியோ காட்சிகள்

· · 611 Views

 

வேற்று மதத்தைச் சேர்ந்த இருவர் மீது பௌத்த பிக்கு ஒருவர் தாக்குதல் நடத்தும் காட்சிகள் அடங்கிய வீடியோ ஒன்று எமக்குக் கிடைத்துள்ளது.

 

 

தாக்குதலுக்கு உள்ளான இருவரும் ஏனைய மதங்களில் உள்ளவர்களை தமது மதத்திற்கு மாற்றும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதால் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

 

 

பெளத்தர்களோ, ஏனைய மதத்தினரோ மற்றுமொரு மதத்திற்கு மாற்றப்படுவது குறித்து நாம் தனியாக பேச வேண்டியிருக்கிறது. அதற்கு முன்னர், பௌத்தத்தைப் பின்பற்றும் பௌத்த பிக்கு ஒருவர் இவ்வாறு நடந்துகொள்வது குறித்து அநேகம் பேச வேண்டியிருக்கிறது.

 

 

இதில் பௌத்த பிக்கு ஒருவர் நடந்துகொள்ளும் விதத்தை எமது சிங்களப் பிரிவின் செய்தி ஆசிரியர் வன்மையாகக் கண்டித்துள்ளார். இந்த பௌத்த பிக்குவின் செயல்பாடுகளும், சண்டித்தனமும் பௌத்தத்திற்கு உரியதல்ல என விமர்சிக்கப்பட்டுள்ளது.

 

 

Leave a Reply

Your email address will not be published.