ரம்புட்டானில் கஞ்சா விற்பனை செய்தவர்கள் கைது !! எப்படியெல்லாம் கண்டு பிடிக்கிறார்கள்

· · 485 Views

றம்புட்டான் விற்பனை செய்வதைப் போன்று பாவனை காட்டி, கஞ்சா போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டிருந்த இருவருடன், நீதிமன்றத்தினால் பிடியாணை பிறப்பிக்கப்பட்ட நிலையில் தலைமறைவாகியிருந்த நான்கு சந்தேகநபர்கள், நேற்றிரவு (05), வென்னப்புவ பொலிஸ் நிலைய குற்ற விசாரணைப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

 

 

 

 

லுணுவில, கம்மல மற்றும் சிறிகம்பல ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்தவர்களே, பிடியாணை பிறப்பிக்கப்பட்ட நிலையில் கைதுசெய்யப்பட்டார்கள் என்றும், கஞ்சா விற்பனையில் ஈடுபட்டவர்கள், நீர்கொழும்பு மற்றும் லியனகேமுல்ல ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் என்றும், பொலிஸார் தெரிவித்தனர்.

 

 

 

றம்புட்டான் விற்பனையில் ஈடுபடுவது போன்று, கஞ்சா விற்பனையில் ஈடுபட்டிருந்த சந்தேகநபர்கள், தும்மலதெனிய பிரதேச வீடொன்றை வாடகைக்குப் பெற்று, அதில் தங்கியிருந்த நிலையிலேயே, கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்துள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

 

 

 

 

இந்தச் சந்தேகநபர்களிடம் இருந்து, 755 மில்லிகிராம் நிறையுடைய கஞ்சா போதைப்பொருள் கைப்பற்றப்பட்டதாகத் தெரிவித்த பொலிஸார், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published.