யாழ் பொது நூலகத்தில் நடிகர் ஆர்யா அண்ட் கோ ரகளை !! அத்துமீறினார்கள் என்கிறார் நூலகர்

· · 1131 Views

யாழ்ப்­பா­ணம் பொது நூல­கத்­தில் அத்­து­மீ­றிய நடி­கர் ஆர்யா மற்­றும் அவ­ரது படப்­பி­டிப்­புக் குழு­வி­ன­ரால் வாச­கர்­கள் மற்­றும் சுற்­று­லா­வி­கள் விச­ன­மும் குழப்­ப­மும் அடைந்­த­னர்.

 

 

நூல­கத்­தின் பணி­க­ளுக்கு இடை­யூறு விளை­விக்­காத வகை­யில் அதன் வெளிப்­பு­றத்­தில் படப்­பி­டிப்பு நடத்­து­வ­தற்கே அனு­மதி வழங்­கப்­பட்­டி­ருந்­த­போ­தும், அத்­து­மீறி நூல­கக் கட்­ட­டத்­தின் உள்ளே படப்­பி­டிப்பு நடத்­தப்­பட்­டுள்­ளது என்று யாழ். மாந­கர சபை ஆணை­யா­ளர் க.ஜெய­சீ­லன் தெரி­வித்­தார்.

 

 

 

இது குறித்து தன்­னி­டம் முறை­யி­டப்­பட்­டி­ருப்­ப­தா­க­வும் அவர் தெரி­வித்­தார்.
படப்­பி­டிப்­புக் குழு­வி­னர் அத்­து­மீறி நடந்­து­கொண்­ட­னர் என்று ஆணை­யா­ளர் தெரி­வித்­த­போ­தும் பொது நூலக ஊழி­யர்­கள் சிலர் படப்­பி­டிப்­புக் குழு­வி­ன­ருக்கு ஆத­ர­வா­கச் செயற்­பட்டு வாச­கர்­கள் உள்ளே நுழை­வ­தை­யும் சுற்­று­லா­வி­கள் நூல­கத்­தைப் பார்­வை­யி­டு­வ­தை­யும் தடுத்து நிறுத்­தி­னர் என்று வாச­கர்­கள் சிலர் விச­னம் தெரி­வித்­த­னர்.

 

 

சுமார் அரை மணி நேரம் இந்­தக் குழப்­பம் நீடித்­தது. அதற்­கி­டை­யில் நடி­கர் ஆர்­யா­வின் படப்­பி­டிப்பு பொது நூல­கத்­தில் நடை­பெ­று­கி­றது என்று கேள்­விப்­பட்ட அவ­ரது ரசி­கர்­கள் சிலர் நூல­கத்­திற்கு வந்து அவ­ரு­டன் ‘செல்பி’ எடுத்­துக்­கொண்­ட­னர்.

 

 

நடி­கர் ஆர்­யா­வுக்கு மணப்­பெண் தேடும் எங்­க­வீட்டு மாப்­பிள்ளை என்­கிற தொலைக்­காட்­சித் தொட­ருக்­கான படிப்­பி­டிப்பே இடம்­பெற்­ற­தா­கக் கூறப்­பட்­டது.

 

 

‘‘படப்­பி­டிப்­புக்­குழு இங்கு வரு­கை­த­ரு­வ­தற்கு முத­லில் எம்­மு­டன் தொலை­பேசி மூலம் தொடர்­பு­கொண்­ட­னர். அது சம்­பந்­த­மாக மாந­கர ஆணை­யா­ள­ரி­டமே தொடர்­பு­கொள்ள வேண்­டும் எனத் தெரி­வித்­தேன்.

 

 

பின்­னர் மாந­கர ஆணை­யா­ள­ரின் உறு­திப்­ப­டுத்­தல் கடி­தத்­து­டன் படப்­பி­டிப்­புக்­குழு வருகை தந்­தது. அந்­தக் கடி­தத்­தில் நூல­கத்­தின் வெளிப்­பு­றம் திறந்­த­வெ­ளிப் பகு­தி­யில் படப்­பி­டிப்பு மேற்­கொள்­ளப்­பட அனு­ம­திக்­கப்­ப­டு­வ­தாக இருந்­தது.

 

 

எனி­னும் வாக­னத்­தில் உள்ளே வரு­வது போன்ற காட்சி பட­மாக்­கப்­ப­ட­வேண்­டும் என்று கேட்­டுக்­கொண்­ட­னர். அதற்கு அனு­ம­தித்­தோம். ஆனால் அவர்­கள் பின்பு நூல­கத்­தின் உட்­பு­ற­மும் அத்­து­மீறி படப்­பி­டிப்­பினை மேற்­கொண்­ட­னர்’’ என்­றார் நூல­கர்.

Leave a Reply

Your email address will not be published.