யாழ் பல்கலை சித்த மருத்துவ முஸ்லிம் மாணவிகளுக்கு கடும் கண்டனம் !! புலிகளுக்கு ஆதரவு போராட்டத்தில் கலந்து கொண்டார்களாம் ( Video )

· · 2500 Views

அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி சித்த மருத்துவ மாணவர்கள் கலந்து கொண்ட கவனயீர்ப்புப் போராட்டத்தில் முஸ்லீம் மாணவர்கள் சிலர் கலந்து கொண்டமை பலரது விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது.

 

 

அரசியல் கைதிகளின் விடுப்பை கோரியும் அவர்களது வழக்குகளை அநுராதபுரத்திலிருந்து வவுனியாவிற்க்கு மாற்றம் என்று கோரிக்கையை முன் வைத்து யாழ் பல்கலைக்கழக சமூகத்தினரால் நிர்வாக முடக்கல் போராட்டம் இன்று (30) முன்னெடுக்கப்பட்டிருந்தது.

 

 

 

 

 

 

இதன் போது குறித்த விடயத்திற்கு ஆதரவு தெரிவிப்பதாக கூறிக்கொண்டு யாழ்ப்பாணம் கைதடி பகுதியில் அமைந்துள்ள சித்த மருத்துவ மாணவர்களும் கலந்து கொண்டிருந்தனர்.

 

 

 

இதில் கலந்து கொண்டிருந்த கைதடி சித்த மருத்துவ பீட முஸ்லீம் மாணவர்கள் இப் போராட்டம் எதற்கானது யார் அரசியல் கைதிகள் என்ற விடயம் தெளிவில்லாமல் தமக்கு வழங்கப்பட்ட விளம்பர அட்டைகளை பிடித்தபடியும் இன்னும் சிலர் தமது கைத்தொலைபேசியில் ஏதோ ஒன்றை பார்வையிட்ட படியும் சிரித்து கதைத்து உரையாடியவாறும் காணப்பட்டனர்.

 

 

 

மேலும் இன்று ஒக்டோபர் 30 1990 ஆண்டு புலிகளினால் வட பகுதி முஸ்லீம் மக்கள் வெளியேற்றப்பட்டமையை கரிய நாளாக அனுஸ்டிக்கப்பட்டமையும் சுட்டிக்காட்டத்தக்கது.கடந்த காலங்களில் புலிகளுக்கு ஒத்தாசை வழங்கியவர்களையே அரசியல் கைதிகளாக அரசாங்கம் கைது செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

 

 

இப்புலிகளினால் கடந்த காலங்களில் முஸ்லீம்களுக்கு உயிரிழப்புகள் சொத்தழிவுகள் இடம்பெற்றதை இப்போராட்டத்தில் கலந்து கொண்ட சித்த மருத்துவ முஸ்லீம் மாணவர்கள் அறிவார்களா?

2 comments

Leave a Reply

Your email address will not be published.