மைத்திரி – மகிந்த ரகசிய சந்திப்பு !! சரத் பொன்சேகாவிற்கு பதவி வழங்க வேண்டாம் என்ற மகிந்தவின் கோரிக்கை ஏற்பு – கேடுகெட்ட அரசியல்

· · 714 Views

இரண்டு நாட்களுக்கு முன்னர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, முன்னள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச ஆகியோருக்கிடையே சந்திப்பொன்று நடைபெற்றுள்ளது.

 

 

மைத்திரிபால சிறிசேனவின் மகன் டட்லி சிறிசேனவின் இல்லத்தில் இந்தச் சந்திப்பு நடந்துள்ளது. இந்தச் சந்திப்பின் போது மகிந்த ராஜபக்ச ஒரேயொரு வேண்டுகோளை மட்டுமே முன்வைத்துள்ளார். சட்டம் ஒழுங்கு அமைச்சுப் பதவி சரத் பொன்சேக்காவிற்கு வழங்கக்கூடாது என்பதே அந்தக் கோரிக்கையாகும்.

 

 

 

 

”தேவையான எந்தவொரு ஒத்துழைப்பையும் நாம் வழங்குகிறோம். ரணிலை பிரதமர் பதவியில் நீடிக்கச் செய்து, நீங்கள் இப்படியே தொடர்ந்து பயணியுங்கள். நாம் எந்த வகையிலும் இடையூறு செய்யமாட்டோம். எனினும், சட்டம் ஒழுங்கு அமைச்சு சரத் பொன்சேக்காவிற்கு வழங்கக்கூடாது. அப்படி வழங்கினால் அனைத்தும் சிக்கலில் முடியும்.” என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, மைத்திரிபால சிறிசேனவிற்குத் தெரிவித்துள்ளார்.

 

 

அத்துடன், ஜனாதிபதியிடம் தான் முன்வைக்கும் ஒரே கோரிக்கை இதுவெனக் கூறியுள்ளார்.

 

 

இதற்கு முன்னர் இருந்த நிலைமைகளுக்கமைய, நாளை செவ்வாய்க்கிழமை (06) நடைபெறவுள்ள அமைச்சரவைக் கூட்டத்தின் பின்னர் சரத் பொன்சேக்கா பதவியேற்கவிருந்தார். எனினும், இந்தப் புதிய நிலைமைக்கமைய, சரத் பொன்சேக்காவிற்கு குறித்த பதவி வழங்கப்படமாட்டாது எனத் தெரியவருகிறது.

Leave a Reply

Your email address will not be published.