மேயர் பாயிஸ் : அலி சப்ரியின் பெயரைசேர்மனாக ஆமோதித்த ஜமீனாவை ” ஜமீனா…நல்லம் நல்லம் என்றார் பாயிஸ் !! – திக் திக் நிமிடக் காட்சிகள்

· · 4086 Views

இன்று புத்தளம் நூலகத்திற்குள் நுழையும் போதே ஒன்று, இரண்டு மற்றும் மூன்று நட்சத்திரங்கள் என்று போலீஸ் தலைகள் தான். வாசலில்..நூலக கீழ்த்தளம் மேல் மாடியில் என்று ஏகத்திற்கும் காக்கிகள்.

 

Image may contain: 2 people, people sitting and indoor

 

 

“எங்காவது பொலீஸ் நிலையத்திற்குள் நுழைந்து விட்டோமோ என்று ஜோக்கடித்தார் புத்தேளில் ஆசிரியர் நமாஸ்.

 

 

 

 

இத்தனை பரபரப்புகளும்  இன்றைய நகர சபைத் தலைவர் தெரிவுக்காகத்தான். நாம் அங்கு சென்ற நேரத்தில் வட மேல் மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் தனது பரிவாரங்களுடன் உள்ளே நுழைந்தார். அவரை அவரை வரவேற்றவர் நகர சபையின் மூத்த அதிகாரியான சபீக் அவர்கள்.

 

Image may contain: 2 people, people smiling, people standing and outdoor

 

 

புத்தளத்தின் இந்த வரலாற்றுரீதியான நிகழ்வுக்கு முதலில் ஆஜரானவர்கள் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிராஸ் உறுப்பினர்கள். அனைவரும் வெள்ளை ஆடையில் இருந்தார்கள். எப்போதும் போல டென்சனைக் காட்டிக் கொள்ளாமல் மிடுக்காக நின்றார் கே.ஏ.பாயிஸ்.

 

Image may contain: 3 people, people standing and outdoor

 

 

“என்ன நடக்கப்போகிறது என்று கேட்டதற்கு, ” இன்சா அல்லாஹ் சரியாக வரும் என்றார்.

 

Image may contain: 3 people, people standing and outdoor

 

 

தலைவர் தெரிவுக்கான கூட்டம்  மேல் மாடியில் நடைபெற்றது என்பதால் அனைவரும் மேல் மாடிக்குச் சென்றனர். அங்கு சென்ற பின்னர் ஐக்கியத் தேசியக் கட்சியின் தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்கள் வந்தார்கள். புத்தளத்தின் முதலாவது பெண் நகர சபை உறுப்பினரான திருமதி. ஆசிரியை  ஜமீனா இல்யாஸ் காமர்தீனும் ஒரு பைல் ராஜ நடைப் போட்டு ஒரு கட்டுடன் வந்தார். புத்தளத்தின்  முதல் பெண் நகர சபை உறுப்பினரும் அவர்தான், முதலாவது பெண் மாநகர சபை உறுப்பினராகவும் அவர் இருப்பார் போல.

 

Image may contain: 3 people, including Kamar Deen, people smiling, people standing and indoor

 

 

இவர்கள் ஆஜரான பிறகு அலி சபரி ரஹீம் கறுப்புக் கோட்டுடன் வந்தார். அவரும் டென்சனில் இருந்தது புலப்பட்டது.

 

 

 

” என்ன வேர்க்கிறது போல ..? என்ற போது, இந்த நேரத்தில் வியர்க்காமல் இருக்குமா என்றார். அவரிடமும் என்ன நடக்கும் என்று கேட்டோம். ” இன்ஷா அல்லாஹ் எனது தலைவர் பதவி நிச்சயம்  என்றார்.

 

Image may contain: 2 people, people standing and outdoor

 

 

பின்னர் தெரிவு செய்யப்பட்ட அனைத்து உறுப்பினர்களும்  உள்ளே நுழைந்தார்கள். NFGG யின் T.S. அமீனும் வந்தார். எப்போதும் போல மர்மான சிரிப்பை சிரித்துக் கொண்டிருந்தார்.

 

 

 

 

அனைவரும் அந்த வட்ட மேசையில் உட்கார்ந்த பிறகு உள்ளூராட்சி ஆணையர் நகர சபைத் தலைவரின் இருக்கையில் அமர்ந்து நகர சபைத் தலைவரை தெரிவு செய்வது சம்பந்தமான விளக்கத்தைக் கொடுத்தார். இந்த நேரத்தில் நகர சபை நிர்வாக அதிகாரியான சபீக், கால்களில் சக்கரம் கட்டியவர் போன்று அங்கும் இங்கும் ஓடிக் கொண்டிருந்தார். சப்ரி பாயிசை விட அவர் டென்சனாக  இருந்திருப்பார் போல.

 

 

 

புத்தளம் நகர சபைத் தலைவராக ஏகமனதாக யாரும் தெரிவாகவில்லை என்பதால் ரகசிய வாக்கெடுப்புக்கான அறிவித்தலை விடுத்தார் உள்ளூராட்சி ஆணையர்.

 

Posted by Mohamed Azwer on Tuesday, March 27, 2018

 

 

இதில் முஸ்லிம் காங்கிரஸ் சார்ப்பாக  தலைவர் தெரிவுக்கு  உறுப்பினர்  கே.ஏ. . பாயிசை  உறுப்பினர் ரபீக் முன் மொழிய மற்றொரு உறுப்பினர் ரஸ்மி வழி மொழிந்தார்.

 

 

 

ஐக்கியத் தேசியக் கட்சியின் சார்ப்பில் அலி சப்ரியை அக்கட்சியின்  ஒரு உறுப்பினர் பிரேரிக்க மற்றொரு உறுப்பினரான ஜமீனா இல்யாஸ் கமர்தீன் ஆமொத்தித்தார். இதனை சற்றும் எதிர்ப்பாராத பாயிஸ், அந்த இடத்திலேயே. ஜமீனாவைப் பார்த்து “”.ஜமீனா..ஜமீனா..ஒஹ்..நல்லம் நல்லம் என லேசான கம்மியக் குரலில் கூறினார். திருமதி ஜமீனா அந்த நேரத்தில் பார்வையைத் தாழ்த்திக் கொண்டிருந்தார்.

 

 

 

 

N.F.G.G. உறுப்பினரான TS அமீனின் பெயரை குறிப்பிட்டு வாக்களிக்க அழைத்தவுடன் அவர் ” தான் வாக்களிப்பில் கலந்து கொள்ளவில்லை என்று ” கூறி விட்டு அமர்ந்தார்.

 

 

 

இந்த நேரத்தில் பாயிஸ் டாக்டர். இல்யாஸின்  உண்மைத்  தொண்டராக இருந்து தனது விஞ்ஞானக் கல்வியையும்  தியாகம் செய்ததும் , அவரின் பிள்ளையான ஜமீனாவை தூக்கி வளர்த்ததும் ஒரு பத்திரிகையாளருக்கு  நினைவுக்கு வந்து தொலைத்தது. வாப்பாவுக்கு தப்பாத பிள்ளை.  அவரின் கட்சிக்காக தனது பணியை செய்திருப்பார் போல.

 

 

 

 

வாக்குகளை அளித்து முடித்ததும் ஆணையர் தமது முடிவுகளை அறிவிப்பதற்காக தயாரானார். அந்த நேரத்தில்  மிக அமைதியாக..மயான அமைதி என்று சொல்வார்களே அந்த பீலிங்.

 

 

 

 

அலி சப்ரியும் பாயிசும்  விவரிக்க முடியாத ஒரு நிலையில் இருந்தார்கள். அமீன் எப்போதும் போல எந்த அலட்டலும் இன்றி சிரித்துக் கொண்டிருந்தார். அவருக்கு மட்டும் எப்படி முடிகிறதோ..?

 

 

 

 

” கமர்தீன் அப்துல் பாயிஸ் 11 வாக்குகளால் வெற்றி என்று அறிவித்தவுடன் உறுப்பினர் ரபீக் எழுந்து ” அல்லாஹு அக்பர் ” என கோஷமிட்டவாறு சென்று கே.ஏ. பாயிசை கட்டியணைத்துக் கொண்டார்.

 

 

 

அதே நேரத்தில் வெளியில் வானைப் பிளப்பது போன்று கோஷமிட்டார்கள் கே.ஏ. பாயிஸ் ஆதரவாளர்கள்.

 

 

 

புத்தளத்தின் முதலாவது மேயருக்கு  நாமும் கைக் கொடுத்து வாழ்த்து தெரிவித்தோம்.

 

 

 

ஒரு முக்கியமான விடயம்..” பாயிஸ் சேர்மன் என்று அறிவித்தவுடன்  “சில ” பெ. அதிகாரிகளின் முகங்கள் மிகச் சோகத்தில் இருந்ததை  அவதானிக்க முடிந்தது. ஏன் என்றுதான் தெரியவில்லை…!!

 

  • மிபவ் 

One comment

  1. //////////மேயர் பாயிஸ் : அலி சப்ரியின் பெயரைசேர்மனாக ஆமோதித்த ஜமீனாவை ” ஜமீனா…நல்லம் நல்லம் என்றார் பாயிஸ் !! //////////// PUTTALAM TODAY
    =====ALI SABRI RAHEEM நினைத்திருந்தால் KAB அவர்களை அகில இலங்கை மக்கள் காங்கிரசுக்குள் உள்வாங்கி இலகுவாக CHAIRMAN ஆக போய் இருக்க முடியும் அதட்குரிய வாய்ப்புக்குள் எத்தனையோ இருந்தும் வெற்றியோ தோல்வியோ போட்டியிட்டுதான் போகவேண்டும் …போட்டியின்றி செல்லக்கூடாது என்று உறுதி யுடன் இருந்தார் ..ASR ..
    இன்றைய CHAIRMAN போட்டிக்கு
    பெரும்பான்மை அங்கத்தவர்களும் முஸ்லீம் அங்கத்தவர்களும் ஒழுக்காற்று நடவடிக்கைக்கு பயந்தபோது …….. .துணிவுடன் ஆமோதித்த ஜமீனா ILLAAS கமருதீனுக்கு UC அங்கத்தவர்கள் பாராட்டு தெரிவித்தனர்
    ஏகமனதாக தெரிவு செய்து அனுப்ப யாருக்கும் விருப்ப மில்லையாம்

Leave a Reply

Your email address will not be published.