” ‘முஸ்லிம் சைபர் ஆர்மி”என்ற அமைப்பே சுகாதார அமைச்சின் இணையத்தை ஹேக் செய்தது..!! இருக்கிற சனியன் பத்தாதா..?

· · 474 Views

சுகாதாரம் மற்றும் ஊட்டச்சத்து, சுதேச வைத்தியத்துறை அமைச்சின் இணையத்தளம் நேற்று (03)  அமைப்பொன்றால் ஊடுறுவப்பட்டுள்ளது.

heck

சுகாதார அமைச்சின் இணையத்தை ஊடுறுவிய  அமைப்பு இணையத்தளத்தின் வரவேற்பு பக்கத்தில இஸ்லாமிய சின்னம் ஒன்றை அடையாளமாக கொண்டு ‘முஸ்லிம் சைபர் ஆர்மி” என்ற பதிவை மேற்கொண்டுள்ளனர்.

குறித்த அமைப்பால் மேற்கொள்ளப்பட்ட பதிவில் ‘நோபல் வாழ்க்கை அல்லது வீர மரணம்” என்ற பதிவும் இடப்பட்டுள்ளது.

இதேவேளை ஊடுறுவலை மேற்கொண்டவர் பெயர் மிஸ்டர் ஷெட் (Mr.Z) எனவும் பதிவிடப்பட்டுள்ளது

இந்நிலையில் ஊடுறுவலை மேற்கொண்ட குறித்த அமைப்பு இந்தோனேசியாவை சேர்ந்தது என முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இதேவேளை சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

Leave a Reply

Your email address will not be published.