முஸ்லிம் கௌன்சில் G.L. பீரிசுக்கு அனுப்பிய கடிதம் உள் நோக்குகளைக் கொண்டது..!! இஸ்லாமிய இயக்கமொன்றின் தேவைக்காக வக்காலத்து வாங்குகிறாரா அமீன்

· · 427 Views

கண்டி மாவட்டத்தின் சில பகுதிகளில் இடம்பெற்ற தீ வைப்புச் சம்பவங்கள் தொடர்பான பொலிஸ்  விசாரணை முடிவுகள் எதுவும் தெரியவராத நிலையில் முஸ்லிம் கவுன்சில் தலைவர் என்.எம். அமீன் ஒப்பமிட்ட அறிக்கையொன்று நேற்று ஊடங்கள் மூலமாக வெளிவந்ததை கண்டேன்.

 

தேசிய மட்ட அங்கீாரம் பெற்ற முஸ்லிம் அமைப்பு என்ற வகையில் முஸ்லிம் கவுன்சில் அடிக்கடி இப்படியான கடிதங்கள் எழுதுவது வழக்கம். ஆனால் இம் முறை பொது ஜன பெரமுன தலைவர் ஜீ.எல். பீரிசுக்கு கடிதம் எழுதி தேர்தல் வன்முறைகள் பற்றி முறையிட்டிருப்பது சந்தேகத்துக்குரியதாக விளங்குகிறது.

 

 

நாட்டில் ஒரு அசம்பாவிதம் நடந்தால் அது பற்றி பொலீஸ் மாஅதிபருக்கோ அல்லது ஜனாதிபதி, பிரதமருக்கோ கடிதம் எழுதி முறையிடுவதுதான் வழக்கம். ஏனெனில் அவ்வாறான சம்பவங்கள் பற்றி விசாரணை நடத்தியே குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்பட வேண்டும்.

 

 

 

அப்படியல்லாது இந்த சம்பங்களுக்கு பொது ஜன பெரமுனதான் காரணம் என திட்டமாகவே நம்பி எடுத்த எடுப்பில் பீரிசுக்கு கடிதம் எழுதுவதற்கு இந்த நாட்டில் பெரிதும் மதிக்கப்படும் சிரேஷ்ட ஊடகவியலாளர் என்.எம். அமீனைத் தூண்டியது யார்? அவரைத் தவறாக வழிநடத்துவது யார்?

 

 

தேர்தல் வன்முறைச் சம்பவங்கள் எல்லவற்றுக்கும் கடிதம் எழுதி முறையிடுகின்ற வழக்கத்தை முஸ்லிம் கவுன்சில் கொண்டிருந்தால்
கல்முனையில் முஸ்லிம் காங்கிரஸ் வேட்பாளர் ரஹ்மத் மன்சூரின் வாகனம் தீ வைத்துக் கொளுத்தப்பட்ட போதும் முஸ்லிம் காங்கிரஸ் வேட்பாளர்களின் வீடுகள் தாக்கப்பட்ட போதும் சாய்ந்தமருது சுயேட்சைக்குழுவுக்கு முஸ்லிம் கவுன்சில் கடிதம் எழுதியிருக்க வேண்டும்.

 

 

காத்தான்குடியில் என்.எப்.ஜி.ஜி அலுவலகம் மீது குண்டுத்தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவங்கள் பற்றியும் முஸ்லிம் காங்கிரஸ் ஆதவளரின் தொழிற்சாலைக்கு தீ வைக்கப்ட்ட சம்பவம் பற்றியும் ராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாவுக்கோ அல்லது சுதந்திர கட்சி தலைவர் ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேனவுக்கோ கடிதம் எழுதியிருக்க வேண்டும்.

 

 

உலப்பனை பயனவங்குவையில் தாமரை மொட்டுக்கு அலுவலகம் வழங்கிய முஸ்லிம் வர்த்தகரின் கடைக்கு தீ வைக்கப்பட்டபோது ஐக்கிய தேசியக் கட்சி தலைவருக்கோ அல்லது சுதந்திரக் கட்சி தலைவருக்கோ முஸ்லிம் கவுன்சில் கடிதம் எழுதியிருக்க வேண்டும்.

 

 

 

மற்றும் பல முஸ்லிம் பகுதிகளில் இடம்பெற்ற தேரதல் வன்முறைச் சம்பவங்கள் பற்றி அதனை செய்ததாக சந்தேகிக்கும் கட்சிகளின் தலைவர்களுக்கு கடிதம் எழுதியிருக்க வேண்டும்.

 

 

 

இதையெல்லாம் செய்யாது திடீரென பொது ஜன பெரமுன வெற்றி பெற்றதும் முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகள் வெடிக்கின்றன முஸ்லிம்கள் அச்சத்தில் உள்ளர்கள் என்பது போன்ற தவறான செய்தியை முழு உலகுக்கும் சொல்ல முஸ்லிம் கவுன்சில் முற்பட்டிருப்பது முஸ்லிம் சமுகத்தை படுகுளியில் தள்ளும் செயலாகும்.

 

 

 

பொது ஜன பெரமுண இன்று தவிர்க்க முடியாத ஒரு சக்திகயாக சிங்கள பெரும்பான்மை மக்களால் அங்கீகரிக்கப்பட்டுள்ள நிலையில் எவ்வாறு அவர்களோடு முஸ்லிம் சமுகம் இனங்கிப் போகலம் என்பது பற்றி சிந்திப்பதே இப்போதைய காலத்தின் தேவையாகும். அவ்வாறல்லாது அவர்களோடு தொடர்ந்தும் முரண்டுபிடிப்பது அரசியல் தற்கொலைக்குச் சமமானதாகும்.

 

 

 

நாடறிந்த ஊடகவியலாளராகவும் சமூக சேவகராகவும் உள்ள என்.எம். அமீன்  அவர்கள் ஒருபோதும் அரசியல் உள்நோக்கங்களுக்காக இதனைச் செய்திருக்கமாட்டார். ஆனால் முஸ்லிம் கவுன்சில் அமைப்புக்குள் உள்ள ஒரு சிலர் அவரைத் தவறாக வழிநடத்தியுள்ளனர். அவரது பெயரையும் ஒப்பத்தையும் பயன்படுத்தி இந்த கடிதத்தை வெளியிட்டுள்ளனர் என்றே நாம் நம்புகிறோம். இது பற்றி என்.எம். அமீன் அவர்கள் முஸ்லிம் மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும்.

அஸ்லம் அஹமட்

Leave a Reply

Your email address will not be published.