முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் புத்தளத்திற்கு இன்று விஜயம் செய்கின்றார் !! பாயிஸ் கட்டாடியார் தடபுடல் ஏற்பாடுகள் – மீன் மார்க்கட் மண்டபம்

· · 979 Views

ஸ்ரீ லங்கா முஸ்லிம்  காங்கிரஸ்  தலைவரும்  அமைச்சருமான  அப்துல்  ரவூப்  ஹக்கீம்  இன்று  புத்தளம்  நகரில்  ஏற்பாடு  செய்யப்பட்டுள்ள  கட்சியின்  மாவட்ட   மாநாட்டில்   கலந்துக் கொள்வதற்காக  5 மணியளவில்  புத்தளம்  நகருக்கு  விஜயம்  செய்ய  உள்ளதாக  கட்சியின்  பேச்சாளர்  ஒருவர்  தெரிவித்தார்.

 

 

புத்தளம்  மாவட்ட  அமைப்பாளரும்  முன்னாள்  அமைச்சருமான  கே.ஏ. பாயிஸின்  ஏற்பாட்டில்  நடக்க விருக்கும்  இந்த  மாநாட்டில் பங்கு  பற்றுதளுக்காகவே  அமைச்சர்  இன்று  புத்தளம்  நகருக்கு  வருகை  தரவுள்ளார்.

 

 

 

எதிர்வரும்  உள்ளூராட்சி  மன்றத் தேர்தலில்  முஸ்லிம்  காங்கிரஸ்  கட்சியானது  அதன்  பங்காளிக்  கட்சியான  ஐக்கிய  தேசியக்  கட்சியுடன்  இணைந்தா  அல்லது  தனித்தா போட்டியிடும்  என்ற  நிச்சயமற்ற  நிலையில்  இந்த  அவசர  மாநாடு  ஏற்பாடு  செய்யப்ட்டுள்ளதானது  புத்தளம்  அரசியல்  வட்டாரத்தில்  ஆச்சரியங்களை  ஏற்படுத்தியுள்ளது.

 

 

 

 

இந்த அவசர  கதியிலான  மாவட்ட  மாநாடானது   கே.ஏ.பி. யின்  நீண்ட  நாள்  அரசியல்  போட்டியாளரும்  அகில  இலங்கை  மக்கள்  காங்கிரஸ்  கட்சியின்  அமைப்பாளருமான  அலி  சப்ரி  ரஹீமுக்கு  அழுத்தங்களைப்  பிரயோகிப்பத்தர்க்காகவே  என்றும்  பேசப்படுகிறது.

 

 

 

இந்த  மாநாட்டின்  ஊடாக  பெரியளவிலான   ஆதரவாளர்  படையை  திரட்டிக்  காட்டுவதன்  மூலம்  அலி சப்ரியையும்  அவ்வாறான  ஒரு  நிலைக்கு   இட்டுச் செல்ல  முயல்கிறார் கே. ஏ ,.பி. ஏற்கனவே  புத்தளத்தில்  அகில  இலங்கை  மக்கள்  காங்கிரசுக்கென அங்கத்தவர்களையோ     அல்லது  ஆதரவாளர்  படையையோ  கொண்டிராதா  அக்கட்சிக்கு  கே. ஏ. பி.யின்  இந்த  ராஜதந்திரம்  பெரும்  சங்கடங்களை  உண்டாக்கக்  கூடியது  என்று  கூறப்படுகிறது.

 

 

 

அண்மையில்   அமைப்பாளர்  சப்ரியினால்  புத்தளம்  நகர  செயலாளருக்கு  எதிராக நடத்தப்பட்ட  போராட்டமும்  ஊர்வலமும்  தோல்வியில்  முடிந்தது  என்பதோடு  புத்தளம்  நகர  மக்களின்  நகைப்புக்கும்  உள்ளானது  என்பது  குறிப்பிடத்தக்கது.

 

 

 

இந்த  சமயத்தில்  கே.ஏ.பி.யின்  மாநாடு  போன்று  ஒன்றை  நடத்த  வேண்டிய  கட்டாயத்திற்குள்ளாகி  இருக்கும்  அகில  இலங்கை  மக்கள்  காங்கிரஸ்  கட்சி  அடுத்ததாக  எடுக்க  இருக்கும்   வியூகம்  எவ்வாராக  அமைந்திருக்கும்  என்பது  புத்தளம்  அரசியல்  வட்டாரத்தில்  எதிர்பார்புகளை  உண்டாக்கியுள்ளது.

 

 

 

 

புத்தளத்தில்   அகில  இலங்கை  மக்கள்  காங்கிரஸ்  கட்சியானது  அதன்  அமைப்பாளர்  அலி சபரியின்  ஜனமயக்கு  திட்டங்களில்  மாத்திரம்  தங்கியுள்ளது எதிர்க் கட்சிகள்  தெரிவிக்கின்றன. மாறாக, அக்கட்சிக்கு   இயல்பாக  அமைந்த  உறுப்பினர்கள்  பெருமளவில்  இருக்கிறார்களா  என்பதற்கான  ஆதரங்களையும்  இது  வரைக்கும்  பத்திரிகையாலர்களினால்  திரட்ட  முயவில்லை  என்பதும்  குறிப்பிடத் க்கது.

 

 

 

 

 

என்றாலும்  கே. ஏ. பி. யும்  சரி  அலி  சப்ரி  ரஹீமும்  சரி  அடுத்து  வரும்  அதிகாரமில்லாத  நகரசபைத்தலைவர்பதவிக்குபோட்டியிடுவார்களா  என்பது  பெரும்  கேள்விக்குறியாக  இருக்கும்  சந்தர்பத்தில்  இந்த  நடக்கவிருக்கும்  இந்த  மாநாடு,  நகரில்  பெய்யும்  கடும்  மழையும்  மீறி  சூட்டைக்  கிளப்பியுள்ளதை  அவதானிக்க  முடிகிறது.

 

 

இதே வேளை  கிழக்கில்  உருவாகியுள்ள  அமைச்சர்  ரிஷாதின்  மெகா  கூட்டணி  இம்முறை  கிழக்கு  முஸ்லிம்   ஏரியாக்களில்  பெரும்  மாற்றங்களை  ஏற்படுத்தும்  என  எதிர்வு  கூறப்படும்  நிலையில்,  கட்சி  பின்னடைவுகளில்  இருக்கிறது  என்ற  யதார்த்தம்  தெரிந்தும்  அமைச்சர் ஹக்கீம்  இந்த  திடீர்  மாநாட்டில்  கலந்து  கொள்வதானது  அவர் அங்குள்ள   நிலமைகளை  புரிந்து  கொண்டுள்ளமையாளும்  அக்கூட்டணிக்கு  எதிராக   வியூகங்களை  வகுக்க திணறுவதாலேயுமாகும்  என்றும்   அரசியல்   வட்டாரங்கள்  தெரிவிக்கின்றன.

 

 

இம்முறை  கிழக்கு  முஸ்லிம்  ஏரியாக்களில்   முஸ்லிம்  காங்கிரசின்  கோட்டைகளான   நிந்தவூர்,  சம்மாந்துரை  உள்ளிட்ட  பல  பிரதேஷங்கள்  கூட்டமைப்பால்  கைப்பற்றப்படும்  என  கிழக்கு  பத்திரிகையாளர்கள்  எதிர்வு  கூறியுள்ளனர்.

 

  • அரிஸ்டோட்டில்

 

 

Leave a Reply

Your email address will not be published.