முஸ்லிம் காங்கிரசுடன் சேர்ந்து ஆட்சியமைக்க முடியுமா..? கல்பிட்டியில் மஹிந்த அணியினர் முயற்சியில்

· · 661 Views
கற்பிட்டி பிரதேச சபையில் எமது கட்சியே ஆட்சி அமைக்கும் அதிகாரத்தை கோரும் என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் மேலதிக பட்டியல் வேட்பாளர் ஒருவர் நேற்று திங்கட்கிழமை எமது இணைய சேவைக்கு தெரிவித்தார்.
கற்பிட்டி பிரதேச சபையில் 11769 வாக்குகளைப் பெற்று 7 ஆசனங்களைப் பெற்றுள்ள எமது கட்சி, இந்த நாட்டின் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆகிய கட்சிகளோடு பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுள்ளதாகவும், விரைவில் சாதகமான முடிவு கிடைக்கும் என்றும் அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
இதேவேளை, கற்பிட்டி பிரதேச சபையில் 17392 வாக்குகளைப் பெற்று 11 ஆசனங்களைப் பெற்றுள்ள ஐக்கிய தேசியக் கட்சி, தாங்களே கற்பிட்டி பிரதேச சபையில் ஆட்சி அமைக்கப்போவதாகவும், அதற்காக ஸ்ரீ.சு.க. மற்றும் ஸ்ரீ.மு.கா ஆகிய கட்சிகளோடு உயர்மட்ட பேச்சுவார்த்தைகள் இடம்பெற்று வருவதாகவும் ஐ.தே.க புத்தளம் தொகுதி அமைப்பாளர் எம்.என்.எம்.நஸ்மி தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published.