“முஸ்லிம்கள் மீது விஷேட கவனம் எடுக்க உறுதி பூண்டுள்ளேன்..!!மகிந்த ராஜபக்ஷ மனம் திறந்தார்

· · 940 Views
இந்த நாட்டு முஸ்லீம்களோடு தனக்கு இருந்து நல்ல உறவை சிலர் சூழ்ச்சி செய்து குழப்ப முயற்சி செய்ததாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ குறிப்பிட்டார்.
முஸ்லீம் முற்போக்கு முன்னணி நேற்று குருநாகல் மல்லவப்பிட்டி பிரதேசத்தில் ஏற்பாடு செய்திருந்த பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்து வெளியிடும் போது முன்னாள் ஜனாதிபதி மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
16507946_10154026743631467_2294333746007950605_n
அங்கு தொடர்ந்து கருந்து வெளியிட்ட முன்னாள் ஜனாதிபதி ..
எனக்கு தனிப்பட்ட ரீதியில் முஸ்லீம்களுடன் நல்ல உறவு இருந்தது சில சக்திகள் அதனை குழப்பின. தற்போது முஸ்லீங்களுக்கு உண்மை விளங்க ஆரம்பித்துள்ளது.தற்போது நாட்டில் முஸ்லீங்களுக்கு எதிராக மறைமுகமாக பாரிய சூழ்ச்சி நடைபெறுகிறது. அதனை அறிந்துகொண்ட முஸ்லீங்கள் எம்மோடு கைகோர்க்க ஆரம்பித்துள்ளனர்.
இந்த அரசாங்கம் ஐரோப்பிய ஏகாதியபத்திய வாதிகளின் நிகழ்ச்சி நிரலில் இயங்குகின்றனர்.எந்த ஒரு முஸ்லீம் நாடுகளுக்கும் தற்போது இலங்கையுடன் நல்ல உறவு இல்லை. எமது ஆட்சியில் முஸ்லீம் நாடுகள் எமக்கு கை கொடுத்தன நாம் அவர்களோடு நெருக்கமான உறவை பேணி வந்தோம். அதன் வெளிப்பாடாகவே பலஸ்தீனத்தில் உள்ள ஒரு வீதிக்கு எனது பெயரை சூட்டியுள்ளனர் என குறிப்பிட்டார்.
Image may contain: 2 people, people smiling, people standing and indoor
தொடர்ந்து அங்கு கருத்து வெளியிட்ட அவர் …
வரப்போகும் எமது ஆட்சியில் இந்த நாட்டு முஸ்லீம்கள் தொடர்பில் விஷேட கவனம் எடுத்துக்கொள்ள தான் உறுதிபூண்டுள்ளதாக குறிப்பிட்டார் .
இந்த கூட்டத்தை முஸ்லீம் முற்போக்கு முன்னணி தேசிய அமைப்பாளர் அப்துல் சத்தார் ஏற்பாடு செய்திருந்த அதேவேளை முன்னாள் அமைச்சர் அஸ்வர் ஹாஜி மற்றும் முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சவாஹிர் ஸாலி ஆகியோர் உரை நிகழ்த்தினார்கள்.
இந்த கூட்டத்தில் பெருந்திரளான ஆண்களும் பெண்களும் கலந்துகொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published.