முஸ்லிம்களை ‘இரவு நேரங்களில் பிற மதத்தவர்களுக்கு இடைஞ்சல்களின்றி செயற்பட வேண்டுகோள் !!

· · 259 Views

“தற்போதைய சூழ்நிலையில், முஸ்லிம்கள், இம்மாதத்தில்  மிகவும் நிதானமாகவும் புத்திசாலித்தனமாகவும்  பொறுப்புடனும் பொறுமையுடனும் நடந்து கொள்ளவேண்டும்” என, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் பைஸர் முஸ்தபா தெரிவித்துள்ளார்.

 

 

மேலும், இரவு நேரங்களில் பிற மத சகோதரர்களுக்கு இடையூறுகள் ஏற்படாதவாறும்,  அவர்களின் நித்திரைக்கு இடைஞ்சல்கள் உண்டாகாத முறையிலும் நடந்து கொள்ளவேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

 

 

 

இது குறித்து அவர் இன்று (21) விடுத்துள்ள உடக அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது,

 

 

 

“இம்மாதத்தில், இரவு நேர வணக்க வழிபாடுகளில் ஈடுபட்டப் பின்னர், முஸ்லிம் இளைஞர்கள் பள்ளி வாசல்களில் இருந்து வீடுகளுக்கு அமைதியாகச் செல்ல வேண்டும். தராவீஹ் தொழுகை, ஹிஸ்பு மஜ்லிஸ் மற்றும் இதர வணக்க வழிபாடுகள் முடிவடைந்த பின்னர், வீதிகளிலும் சந்திகளிலும் கூடி வீணாக நேரத்தைக் கழிப்பதைத் தவிர்த்துக் கொள்ள வேண்டும்.

 

 

 

“இரவு நேரங்களில் பிற மத சகோதரர்களுக்கு இடையூறுகள் ஏற்படாதவாறும்,  அவர்களின் நித்திரைக்கு இடைஞ்சல்கள் உண்டாகாத முறையிலும் நடந்து கொள்ளவேண்டும்.

 

 

 

“இன்று சில இளைஞர்களும் சிறு பிள்ளைகளும் இரவு வேளைகளில் வீதிகளில் இறங்கி விளையாடி வருவதைக் காண்கின்றோம். இதனால், சில நேரம் வீண் பிரச்சினைகள் எழுவதற்கு வழி ஏற்படுகின்றன. பொலிஸாருக்கும், தமது கடமைகளைப் புரிவதற்கு தடங்கல் ஏற்பட இடமுண்டு.

 

 

 

“எனவே, இவ்வாறானவர்கள் நாட்டின் சட்டம், ஒழுங்கு மற்றும் போக்குவரத்து விதிமுறைகளை மதித்து, தவறான செயற்பாடுகளிலிருந்து தவிர்த்து நடந்து, ரமழானின் புனிதத் தன்மையைப் பேணிக்கொள்ளுமாறும் கேட்டுக் கொள்கின்றேன்” எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

Leave a Reply

Your email address will not be published.