முஸ்லிம்களுக்கு எதிரான கடும்போக்குவாத அமைப்பான மகாசோன் படையணி அரசியல் கட்சியாகிறது..!!

· · 844 Views

சிங்கள கடும்போக்குவாத அமைப்பான மகாசோன் படையணி, அரசியல் கட்சியாக மாறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

 

 

 

தமது கட்சியைப் பதிவு செய்வதற்கான ஆவணங்களை அதிகாரிகளிடம் கையளித்திருப்பதாகவும் அந்த படையணியின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

 

எல்லா இனங்களுக்கும் அரசியல் கட்சிகள் உள்ளதாகவும் சிங்களவர்களுக்கு என்று எந்த அரசியல் கட்சிகளும் இல்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

 

 

எனவே சிங்களவர்களுக்கான புதிய அரசியல் கட்சியை மகாசோன் படையணி மற்றும் ஏனைய சில அமைப்புகளுடன் இணைந்து உருவாக்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

 

 

அண்மையில் முஸ்லிம்களுக்கு எதிராக கண்டி திகன மற்றும் அம்பாறையில் இடம்பெற்ற வன்முறைகளை மகாசோன் படையணியே சமூக ஊடகங்களின் ஊடாகவும், நேரடியாகவும் தூண்டி விடப்பட்டதாக தகவல்கள் வெளியாகியிருந்தன.

 

 

இதற்காக, மகாசோன் படையணியின் தலைவர் உள்ளிட்ட பலர் கைது செய்யப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published.