முஸ்லிம்களுக்கு எதிரான தாக்குதலுக்கு சிங்களவர்கள் அனைவரும் வெட்கப்பட வேண்டும்..!!அமைச்சர் கிரியல்ல சபையில் –

· · 596 Views

முஸ்லிம்களுக்கு எதிரான தாக்குதலுக்கு சிங்களவர்கள் அனைவரும் வெட்கப்பட வேண்டும் என்பதோடு நாம் அனைவரும் அவர்களிடம் மன்னிப்பு கோர வேண்டும் என சபை முதல்வரும் அமைச்சருமான லக்ஸ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.

 

பாராளுமன்றத்தில் இன்று இடம்பெற்ற விசேட விவாதத்தின் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

 

 

முஸ்லிம்கள் எப்போது தமது சொந்த கால்களிலேயே நிற்பார்கள். ஒருபோதும் அரசாங்கத்திடம் வேலை வாய்ப்பு கேட்டு போராட மாட்டார்கள்.

 

 

 

 

இந்நிலையில், திகன சம்பவம் இடம்பெற்று ஐந்து நாட்களின் பின்னரே வன்முறை அரங்கேறி உள்ளது.

 

 

இதற்கு வெளிமாவட்டங்களில் இருந்து வந்தவர்களே காரணம் என அவர் சுட்டிக்காட்டினார்.

 

 

அம்பாறையில் இடம்பெற்ற கலவரத்துக்கு காரணமான சிங்களவரும் இங்கு இருந்ததாக எனக்கு தகவல் கிடைத்தது. மேலும் இந்த சம்பவங்களை பார்த்து கை தட்டி சிரிக்கின்றவர்கள் சொர்க்கத்தில் பொறுப்பு கூற வேண்டும் என கூறினார்.

Leave a Reply

Your email address will not be published.