மும்மான முஸ்லிம் வித்தியால மைதானத்தை மாணவர்கள் பயன்படுத்தலாம்..!! BBS வும் பொலீசாரும் தோற்றுப் போயினர் – மன்னிப்புக் கேட்ட பொலீசார்

· · 1051 Views
பொதுபல சேனாவும், ஞானசாரரும் தம்பதெனியா – மும்மன்ன மைதானத்தை கைப்பற்றும் நோக்குடன் போட்ட திட்டம் முஸ்லிம் சட்டத்தரணிகளின் முயற்சியால் நிர்மூலம் செய்யப்பட்டுள்ளது.
mummanai1
குறித்த மைதானத்தில் முஸ்லிம் சிறுவர்களுக்கு விளையாட தடை ஏற்படுத்தப்பட்டு, அந்த முஸ்லிம் பாடசாலையின் மைதானத்தை சிங்கள இனவாத சக்திகள் கபளீகரம் செய்யவும் திட்டமிட்டிருந்தன. இதற்கு பொலிஸாரும், சிங்கள அதிகாரிகளும் ஒத்துழைப்பு நல்கியிருந்தனர்.
இந்நிலையில் இவ்விவகாரத்தை கையிலெடுத்த சிராஸ் நூர்த்தீன் தலைமையிலான முஸ்லிம் சட்டத்தரணிகள் குழு இதுதொடர்பில் மனித உரிமைகள் ஆணைக்குழுவிலும், நீதிமன்றத்திலும் முறைப்பாடு செய்திருந்தது.
இதுதொடர்பிலான விசாரணைகள் இன்று நடைபெற்றபோது, தம்பதெனியா – மும்மன்ன பாடசாலை மாணவர்களுக்கு அவர்களின் மைதானத்தில் விளையாட ஏற்படுத்திய தடைக்காக பொலிஸார் மன்னிப்புக் கேட்டனர்.
அதேவேளை வலயக் கல்விப் பணிப்பாளரும் மனித உரிமைகள் ஆணைக்குழு முன் ஆஜராகி குறித்த மைதானத்தை தம்பதெனியா – மும்மன்ன பாடசாலையிடமே ஒப்படைப்பதாகவும், எதிர்காலத்தில் மாணவர்கள் பயன்படுத்தலாமெனவும் வாக்குறுதி வழங்கியுள்ளார்.
Human Rights Commission inquiry on complaints of Mummana Dambadeniya Muslim School ground and related Court case.
1.HRC observed that filing a case against Members of SDS of the said school under Sec 81 of Crim.Pro.Code in Kuliyapitiya MC is a violation & infringement of Fundamental rights. OIC of Dambadeniya police was apologetic but HRC fixed a date to award compensation to the complainant.
2. Zonal Director was present before HRC and he agreed in writing to allow the play ground to be handed over and to be used by the students. He assured every possible assistance in future with the SDS and parents in protecting the said school play ground for the betterment of students.
Alhamdulilah. Justice is met in this issue.
RRT attorneys appeared and defended the rights of Mummana Muslims.

Leave a Reply

Your email address will not be published.