முன்னாள் மு.கா. தேசிய அமைப்பாளர் கே.ஏ. பாயிஸ், புத்தளம் மாவட்ட மு.கா. அமைப்பாளராக நியமனம் !!

· · 1098 Views

முன்னாள் பிரதி அமைச்சரும், நகர சபைத் தலைவருவமான கே.ஏ. பாயிசுக்குக்கு அண்மையில் புத்தளத்திற்கு விஜயம் செய்த முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ஹக்கீம் 3 பதவிகளை வழங்குவதாக வாக்குறுதி அளித்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

 

 

 

 

முஸ்லிம் காங்கிரஸ் புத்தளம் மாவட்ட அமைப்பாளர்,  புத்தளம் மாவட்ட  தேர்தல் தெரிவுக் குழு  தலைவர் , புத்தளம் மாவட்ட முஸ்லிம் காங்கிரஸின்  அபிவிருத்திக்கான  குழுத் தலைவர் ஆகிய  பதவிகளையே  அவர்  ஜனாப். பாயிசுக்கு வழங்குவதற்கு  இணங்கியுள்ளதாகவும்  தெரிவிக்கப்படுகின்றது.

 

 

 

கடந்த வாரம் திருமண நிகழ்வு ஒன்றில் கலந்து கொள்ள வந்த  அமைச்சர்  ஹக்கீமிடம்  கட்சியின்  சிரேஷ்ட உறுப்பினர்கள்  மன்றாடியதை  அடுத்தே  அமைச்சர்  ஹக்கீம்  இந்த  வாய்மொழி  மூல பதவி வழங்கலுக்கு இணங்கியதாகவும்  கூறப்படுகின்றது.

 

 

தனது  அரசியலை  பாடசாலை  காலத்திலிருந்து  முஸ்லிம்  காங்கிரஸ்  ஊடாக  ஆரம்பித்த  ஜனாப். பாயிஸ்  பின்னர்  மகிந்த  ராஜபக்ஷ  தலைமையிலான  அரசாங்கத்தில்  பிரதி  அமைச்சராகவும் ஸ்ரீ லங்கா  சுதந்திரக்  கட்சியின்  புத்தளம்  அமைப்பாளராகவும்  செயல்பாட்டார்.

 

 

கடந்த  2006 ம்  ஆண்டில்  அவர் ஐக்கிய  தேசியக்  கட்சியின்  தேசியப் பட்டியல் எம்பியாக  நியமனமான  காலத்தில் புத்தளத்தின் அபிவிருத்தி, கல்வி விவகாரங்களில்  ஏற்பட்ட   வீழச்சியை  அடுத்து  ஆளும்  கட்சியுடன்   இணைந்தார்.

 

 

முன்னாள்  நகர  சபை தலைவரான  பாயிஸுக்கு  அமைச்சு  நிறுவனங்களில்  பதவி  ஒன்று  வழங்குவது  தொடர்ப்பில்  அமைச்சர்  ஹக்கீம்  உறுதிகளை  வழங்கவில்லை  என்பதும்  குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published.