“முடியுமானால் அல்லாஹ்வை வந்து காப்பற்றச்சொல்..!! இரண்டு பஸ்களில் வந்த காடையர்கள் சொல்லியே அடித்தார்கள் – அதனை பொலீஸ் குண்டர்கள் பார்த்துக் கொண்டிருந்தார்கள்

· · 943 Views

அம்பாறை ஜும்மா🕌பள்ளிவாசல் இனவாதிகளால் நேற்றிரவு தாக்கப்பட்டு தீ வைக்கப்பட்டுள்ளதை அடுத்து அங்கு மக்களிடம் ஒரு சில பதட்ட நிலை ஏற்பட்டுள்ளது.

 

 

 

அத்தாக்குதல் தொடர்பாகா அப்பிரதேச வாசியொருவர் கூறுகையில் அவர்கள் இரண்டு பஸ்களில் வந்தனர். அவர்கள் ஆரம்பத்தில் பள்ளிவாசலின் சுற்றுமதிலை தள்ளி உடைத்தார்கள். நாங்கள் பள்ளிவாசலில் தங்கிருந்தோம். பின்னர் அவர்கள் அங்கிருந்த வாகனங்கள்மீதும் எங்கள்மீதும் தாக்கினார்கள். பின்னர் பள்ளிவாசலில் இருந்த சில குர்ஆண்களுக்கு தீ வைத்தார்கள்.

 

 

 

 

இறுதியில் முடியுமானால் உங்கள் அல்லாஹ்வை காப்பாற்றச்சொல் என்று சவால் விட்டு சென்றுவிட்டார்கள்….

 

 

 

மேலும் இப்பகுதியில் மூன்று முஸ்லிம் ஹோட்டல்கள்மீதும் அவர் தாக்கி நாசம் செய்துள்ளார்கள் . இது தொடர்பாக பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் விசாரணை மேட்கொண்டும் வருகின்றார்கள். இதில் அவர்கள் தாக்கும் போது #எங்கடமக்களின் இனப்பெருக்கத்தைக் குறைப்பதற்கு உணவு போட்டா கொடுக்கின்றீர்கள் என்றுகூறிய நிலையில் அவர்கள் தாக்கியதாகவும் கூறினார்.

 

 

 

👉அம்பாறையில் இடம்பெற்ற இனவாதத் தாக்குதலின் சேதங்கள். ..

மூன்று உணவகம் ( ஹோட்டல் )

 

பள்ளிவாசலில் தரித்துவைக்கப்பட்ட வாகனங்கள். அம்பாறை பெரிய ஜும்மா பள்ளிவாசல். …

 

அஷ்ஷெய்க் ஹபீஸுல் ஹக் ( பாதிஹி )
Varipathanchenai

அம்பாறை நகரில் பதற்றம்; முஸ்லிம்கள் மீது தாக்குதல் (படங்கள்)

அம்பாறை நகரில் பதற்றம்; முஸ்லிம்கள் மீது தாக்குதல் (படங்கள்)

அம்பாறை நகரில் இன்று (27) அதிகாலை மேற்கொள்ளப்பட்ட இன வன்முறைகளினால் அங்கிருந்த ஒரேயொரு பள்ளிவாசலும், முஸ்லிம்களுக்கு சொந்தமான வர்த்தக நிலையங்களும் தாக்கப்பட்டுள்ளதுடன் சில வாகனங்களும் எரிக்கப்பட்டுள்ளன.

நேற்று (26) நள்ளிரவு வேளையில் அம்பாறை நகரிலுள்ள முஸ்லிம் ஹோட்டலில் உணவருந்த வந்திருந்த பெரும்பான்மை இனத்தை சேர்ந்த சில இளைஞர்கள் ஹோட்டல் உரிமையாளருடன் வாய்த்தர்க்கத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து ஒரு மணித்தியாலம் கடந்த நிலையில் அங்கு திரண்டு வந்த பெரும்பான்மை இனத்தை சேர்ந்தோர் குறித்த ஹோட்டலையும் அந்தப் பகுதியில் அமைந்துள்ள ஜூம்ஆப் பள்ளிவாசல் மற்றும் முஸ்லிம் வர்த்தகருக்கு சொந்தமான பலசரக்கு கடையையும் தாக்கியுள்ளனர்.

பள்ளிவாசலினுள் அத்துமீறி உள்நுழைந்தோர் அங்கிருந்த அல்குர்ஆன் பிரதிகளையும் சேதப்படுத்தியுள்ளனர்.

இதன்போது பள்ளிவாசல் மற்றும் வர்த்தக நிலையங்களில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள்கள் உட்பட சில வாகனங்களும் எரிக்கப்பட்டுள்ளன.

அத்துடன் பள்ளிவாசலில் தங்கியிருந்த சிலரும் தாக்கப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்படுகிறது.

இந்த வன்முறை சம்பவங்களை தொடர்ந்து அம்பாறை நகரில் பெரும் பதற்றம் நிலவுவதுடன் பொலிஸ் மற்றும் விசேட அதிரடிப்படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

அச்சம் காரணமாக அம்பாறை நகரில் தொழில் நிமித்தம் தங்கியிருந்த முஸ்லிம்கள் அங்கிருந்து வெளியேறியிருப்பதுடன் அங்குள்ள மாவட்ட கச்சேரி மற்றும் அரச அலுவலகங்களில் பணியாற்றுகின்ற உத்தியோகத்தர்கள் கடமைக்கு சமூகமளிக்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published.