மீனவ நண்பன் : ஐக்கியத் தேசியக் கட்சி முஸ்லிம் ஏரியாக்களில் ஏன் தோற்றது..? ஆய்வு செய்கிறார் மீனவர் நவ்சாத்

· · 796 Views

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திரு பெயரால் ஆரம்பிக்கின்றேன்.

 

 

புத்தளம் அரசியல் வரலாற்றில் புத்தளம் மக்கள் செய்த மாபெரும் தவறு என்னவென்றால் 1972ஆம் புத்தளத்தின் பாராளுமன்ற இடை தேர்தல் ஒன்று நடை பெற்றது. அன்று ஆளுங்கட்சியாக ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி இருந்தது. அந்த ஆளுங்கட்சியின் கல்வி அமைச்சராக பதூதீன் முகம்மத் இருந்தார்.

 

 

 

 

 

அவரது மருமகனான மர்ஹூம் லதீப் தொரை அவர்கள் அக்கட்சியின் புத்தள தொகுதியில் வேட்பாளராக போட்டி இட்டார். எதிர் கட்சியான UNP யில் மர்ஹூம் நயினார் மரைக்கர் போட்டி போட்ட பொழுது புத்தள மக்கள் அனைவரும் UNP க்கு வாக்களித்து மாபெரும் தவறை செய்தார்கள்.

 

 

 

 

 

நாட்டின் எதிர்க்கட்சி வரிசையில் புத்தளம் பாராளுமன்ற உறுப்பினரை அனுப்பி வைத்தார்கள். அன்று விட்ட பிழைக் காரணமாக 2018.02.10 ம் திகதி வரைக்கும் நாட்டின் புத்தளத்தின் ஆளுங்கட்சிக்கே வாக்களித்த வரலாறு தான் இருந்து வந்தது.

 

 

 

 

2018.02.10ம் திகதி நடைபெற்ற புதிய உள்ளுராட்சி மன்ற தேர்தலில் ஏன் மாற்றமாக வாக்களித்தார்கள்? மாற்றமாக வாக்களித்திற்கு UNP செய்த முதலாவது பிழை

 

 

 

 

 

(1) புத்தளத்தில் காலம்காலமாக UNPயின் புத்தளத் தொகுதியின் அமைப்பாளராக புத்தளத்தைச் சேர்ந்த முஸ்லிம் ஒருவர் இருந்து வந்தார்.

 

 

 

 

 

இம்முறை பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த ஹெக்டர் ஹப்பு ஹாமியை நியமித்ததன் காரணமாக புத்தள மக்களின் வெறுப்புணர்ச்சி இம்முறை UNPயின் பக்கம் இருந்தது. 

 

 

 


(2) மன்னார் இடத்தை வசிப்பிடமாகக் கொண்ட றிஷாட் பதூதீன் புத்தளத்தை ஆளப்பாக்கின்றார் என்ற எண்ணம் காணப்பட்டது. இவை இரண்டுமே UNPயின் தோல்விக்கு மிக முக்கிய காரணமாக இருந்தது.

 

 

 

 

 

ஸ்ரீ லங்கா முஸ்லிம் கட்சிக்கு இதுவரை காலத்துக்கும் வாக்களிக்காத பெரும்பாலான புத்தள மக்கள் இம்முறை வாக்களித்ததற்கான காரணம் என்ன? 11 வட்டாரத்தில் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழ்கின்ற 7 வட்டாரத்தில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் 7 வட்டாரத்தையும் பெரும் பான்மை வாக்குகளால் வெற்றி பெற்றது. அந்த வெற்றிக்கான காரணம் அவ்வட்டாரத்தில் போட்டி போட்டவர்கள் அல்ல. K.A பாயிஸ் எனும் தனிநபர் ஒருவரை நம்பியே புத்தள மக்கள்கள் அதிக வாக்குகளை அளித்தனர்.

 

 

 

 

 

முஸ்லிம் காங்கிரஸ் அங்கத்தவர்கள் என்னை தவறாக எண்ண  வேண்டாம். என்னவென்றால் இதற்கு முன்பதாக நடந்த பாராளுமன்ற தேர்தலில் ஒட்டகம் எனும் சின்னத்தில் போட்டி போட்டு K.A.பாயிஸ்க்கு வாக்களித்தார்கள். 10000 க்கும் மேல் கிடைத்தது . அதில் புத்தள நகர சபைக்கு உட்பட்ட எல்லைக்குள் 8000 கிடைத்தது. ஏன் சொல்கின்றேன் என்றால் புத்தள வரலாற்றில் எந்த அரசியல் வாதிகளும் மொத்தமாக ஒரு கட்டி ஓட்டை சம்பாதித்த வரலாறு இல்லை. அது K.A. பாயிஸ் அவர் தான் சாதனை படைத்துள்ளார். இன்னும் அதிகமான வோட்களை எடுக்க வேண்டும் என்று அல்லாஹ்விடம் பிராத்திக்கின்றேன்..

Leave a Reply

Your email address will not be published.