மீண்டும் : நகர சபைத் தலைவராகிறார் கே.ஏ. பாயிஸ்..!! ஐக்கியத் தேசியக் கட்சி ஆதரவு

· · 2677 Views

தற்போதைய கொழும்பு  அரசியல் கொதிநிலை  தணிந்துள்ளதால், புத்தளம் நகர சபையின் தலைவராக மீண்டும் கே. ஏ. பாயிஸ்  தெரிவு செய்யப்படுவதற்கான சூழல்கள் உருவாகியுள்ளன.

 

 

 

 

கடந்த ஒரு வார காலமாக அரசாங்கத்திற்குள் இடம் பெற்ற ஆட்சி மாற்ற இழுபறி நிலைமை  தற்போது  தணிந்துள்ளதால்  பெரும்பாலும் ஐக்கியத் தேசியக் கட்சியின் ஆதரவுடன் ஜனாப். பாயிஸே  தெரிவாவாவர் என கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.

 

 

 

 

புத்தளம் பிரதேச சபை மற்றும் வண்ணாத்திவில்லு , கல்பிட்டி  பிரதேச சபைகளில் முஸ்லிம் காங்கிரசின் ஆதரவின்றி அங்கு வெற்றி ஈட்டியுள்ள ஐக்கியத் தேசியக் கட்சியினால் ஆட்சியமைக்க முடியாது என்பதால் இவைகளுக்கான ஆதரவைப் பெற்றுக் கொள்வதற்காக புத்தளத்தில் முன்னால் தலைவர் பாயிஸை  ஆதரிக்க ஐக்கியத் தேசியக் கட்சி தீர்மானித்துள்ளது.

 

 

 

இந்தச்  செய்தியை தற்போது தெரிவாகியுள்ள நகர சபை உறுப்பினர்  கே .ஏ. பாயிஸ்உறுதிப்படுத்தினார்.

 

 

 

 

நடைப்பெற்ற  புத்தளம் நகர சபைத் தேர்தலில் ஐக்கியத் தேசியக் கட்சி, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், நல்லாட்சிக்கான தேசிய முன்னணி மற்றும் சுதந்திரக் கட்சி, மகிந்த அணி  என்பன  முஸ்லிம் ஏரியாக்களில்  தோற்றுப்போயின என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published.